பிறந்த போது என்னை ஏந்திய மண்ணே!
தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே !
நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே !
தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே !
என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே !
அழகான மயிலை மண்ணே !

வாதனாராணிகளையும் பூவரசுகளையும் கிழுவைகளையும்
இன்னபிற மரங்களையும் எமக்காகச் சுமந்த மண்ணே !
வீரர்களையும் சூரர்களையும் கற்றவர்களையும் வித்தகர்களையும்
பெற்றெடுத்து பெருமை கொண்ட மண்ணே !
அன்பான மயிலை மண்ணே !
தேவைக்கேற்ப அனைத்தையும் தன்னகத்தே கொண்ட தாய் மண்ணே !
மற்றவர்கள் உன்னைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட போதும்
நிதானம் தவறாது முன்னேறிய பெருமைக்குரிய மண்ணே !
போட்டிகளில் முன்பாகவும் பொறாமையில் கடைசியாகவும்
என்றும் மாறாநிலை கொண்ட எங்கள் மயிலை மண்ணே !
காவியமாகிய பலரைக் கண்டும் கலங்காத நீ இன்று
தனியே நின்று எங்களைக் கலங்க வைப்பதேன் என் மண்ணே !
தனிமை உனக்குப் பிடித்துவிட்டதா
அதற்காக எங்களைத் தனிமைப் படுத்தாதே என் மண்ணே !
பிடிவாதம் ஏன் மயிலை மண்ணே !
பசுவைப் பிரிந்த கன்றுபோல், தாயைப் பிரிந்த குழந்தைபோல்
உன்னைப் பிரிந்த நாங்கள் உன் மடியில் தவழத் துடிக்கின்றோம்
எப்போது எங்களை உன் மடியில் தவழவைப்பாய் என் தாய் மண்ணே !
குழந்தைகள் நாம் தவிக்கின்றோம் அழைத்துக்கொள் என் மண்ணே !
பாசமுள்ள மயிலை மண்ணே !
தவறி விழுந்த போதெல்லாம் தளராதே
தாவிப்பாய் என்று ஏவி விட்ட என் தமிழ் மண்ணே !
உன் மண்ணெடுத்து பூசிக்கொள்ள அசையாயிருக்கிறது
அதைவிட விழுந்து புரண்டு கதறி அழவேண்டும் போலிருக்கின்றது !
ஊரே எனது உயிரே பார் போற்றும் மயிலை மண்ணே !
தங்கத்தைவிட மேலான உன் அழகு நிலத்தை
தழுவிப்பார்ப்பது எப்போது என்று தயங்காது
உன் குழந்தைகளுக்குச் சொல்
என்னைப் பெற்றெடுத்த மயிலை மண்ணே !