கலாபூஷண விருது பெற்ற மயிலையின் மைந்தர்கள்.
15-12-2013 அன்று இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நடைபெற்றது, இவ் விழாவில் மயிலையின் மைந்தர்கள் இருவர் கலாபூசன விருதினை பெற்று எமது ஊரிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சிற்பக்கலை துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கட்கும், நாடகத் துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை அவர்கட்கும் இவ் விருது கிடைக்கப் பெற்று இருக்கின்றது .இவ் இரு கலைஞர்களையும் அனைத்து மயிலை மக்கள் சார்பாக உளமார வாழ்த்துகின்றோம்.