★★★★★★★★★★★★★★★★★★
தலை மகனின் திருநாளாம் இன்று ,
தமிழர் தேசமெங்கும் பெருநாளாம் அன்று .
விலை மதிக்க முடியாத வேந்தே !
அலைகரையில் ஆளான சொத்தே .
இருள் கவிந்த தேசத்தில் உதித்த சூரியனே !
குன்றாத ஒளியோடு என்றும் ஒளிர்வாய் .
அழியா வரம் கொண்ட ஆதவனே !
உன் அடியார் முன் தோன்றி அருள்வதெப்போ?
வாழ்க !வாழ்க !!வாழ்க !!!