கடலோர கிராமம் கண் விழித்து கொள்ளுது .
ஆழ்கடல் போனோனின் அலையோசை வருகுது .
அத்தான் என்று அன்புள்ளம் அழைக்குது.
காங்கேசன் சாலை அகலத் திறக்குது .
கன காலம் கழித்து தன் உறவை அழைக்குது .
காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .
முக்கனி படைத்து பூசை நடக்குது .
எட்டு திக்கும் இசை இசைக்குது .
எங்கள் ஊரில் வசந்தம் பிறக்குது .
காது அடைக்கும் சத்தம் வருகுது .
இரண்டு தசாப்த புதினம் பறையுது .
காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .
இரவல் கோடியில் இருந்து உன்னை நினைத்தோம் .
நாறிய மீன் உண்ட போது அழுதோம் .
தவறணையில் குடித்த போது தலை விதியை நொந்தோம்.
வாழை இலைக்கு ஜந்து ரூபா துடித்தது நெஞ்சு .
கத்திப் பிடிக்கும் காசு ?
காணாத இடமெல்லாம் கண்டு விட்டோம் .
கூடாத கூட்டெல்லாம் கூடி விட்டோம் .
காலங் கடந்த ஞானமிது காணப்போறோம் தேசமினி .
"மயிலைக்கவி"
பதிவு: 16/02/2013