தொடர் – 6
சண்முகநாதன் கஜேந்திரன்
சிவன் வசனம் :
ஐயோ சண்டாளி என்னிடம் மாலையை வாங்கியது மட்டுமன்றி அதிலிருந்த நோய்களையும் எனக்கே போட்டுவிட்டள்.
சிவன் பாடல்:
|
அந்த மாரியொரு மாரி பெண்பிறந்து, பெண்பிறந்து
இந்த மானிலத்தோர் குடி கெட்டதெடி. தேவியொரு தேவி பெண்பிறந்து, பெண்பிறந்து இந்த தேசத்தோர் குடி கெட்டதெடி. ஆங்கார மாரி போட்டமுத்து, போட்டமுத்து எனக்கு அனலாய் எரியுதெடி. நெட்டூரமாரி போட்டமுத்து, போட்டமுத்து என்னால் நிண்டு கொள்ளக் கூடுதில்லை. அனலோடி மாரி உன்சொரூபம் பாதகத்தி என்னால் அண்டலிக்கக் கூடுதில்லை. நெருப்போடி மாரி உன்சொரூபம் பாதகத்தி என்னால் நிண்டு கொள்ளக் கூடுதில்லை. |
சிவன் வசனம்:
|
நான் இப்படித் தனிமையில் இருந்து புலம்புவதில் அதுவித பயனுமில்லை. எனது மனைவியாகிய பார்வதியையாவது அழைத்துப் பார்ப்போம்.
|
சிவன் பாடல்:
|
தாலி பறி போகுதடி பார்வதியே பெண்ணே
உந்தன் தலைவன் இங்கே மாளுகிறான் பத்தினியே பெண்ணே. கூறை பறி போகுதடி பார்வதியே பெண்ணே உந்தன் கொழுந்தனிங்கே மாளுகிறான் பத்தினியே பெண்ணே. அபயம் அபயமடி பார்வதியே பெண்ணே நீயும் அதி சுறுக்காய் வாவெனடி உத்தமியே கண்ணே. காலால் நடவாமலே பார்வதியே பெண்ணே – நீயும் காற்றாய்ப் பறந்து வாவேன் உத்தமியே கண்ணே. |
பார்வதி அம்மன் வரவு
|
|
பார்வதி அம்மன் பாடல்:
|
அபயக்குரல் கேட்டல்லவோ பார்வதி அம்மன்
அவா அதி சுறுக்காய் வாறாவாம் பார்வதி அம்மன். காலால் நடவாமலே பார்வதி அம்மன் அவா காற்றாய்ப் பறந்து வாறா பார்வதி அம்மன். ஓட்டம் நடையுடனே பார்வதி அம்மன் ஒரு நொடியில் போறாவாம் பார்வதி அம்மன். நாதன் அரண்மனைக்கோ பார்வதி அம்மன் நடந்தோடி வந்து நின்றா பார்வதி அம்மன். பார்வதி வசனம் : நாதா நமஸ்கரிக்கின்றேன். தங்களிற்கு என்ன நடந்தது ? என்னை அவசரமாய் அழைத்ததன் நோக்கம்…. |
சிவன் வசனம்:
|
பெண்ணே தெரிவிக்கின்றேன். இவ் ஆசனத்தில் அமர்வாயாக. உனது தங்கையாகிய ஆங்காரமாரி என்னிடம் இருந்த கண்டசுர மாலையை வாங்கியது மட்டுமன்றி, அதிலுள்ள நோய்களையும் எனக்கே போட்டுவிட்டாள் பாவி.
|
சிவன் பாடல்:
|
எடி பூவிழப்பாய் பொட்டிழப்பாய் பார்வதியே பெண்ணே
உந்தன் புருஷனையோ நீ இழப்பாய் உத்தமியே கண்ணே. எடி கூறை இழந்த கதை பார்வதியே பெண்ணே உன்னைக் கூப்பிட்டல்லோ கேட்கப்போறார் ஊரவர்கள் தானும். எடி தாலி இழந்த கதை பார்வதியே பெண்ணே உன்னைத் தனித்து வைத்து கேட்கப்போறார் ஊரவர்கள் தானும். எல்லாம் இழந்தாயடி பார்வதியே பெண்ணே – நீயும் என்னையுமோ விட்டிழந்தாய் உத்தமியே கண்ணே. தாங்க முடியவில்லை பார்வதியே பெண்ணே – என்னைத் தாங்கிப் பிடியேனடி உத்தமியே கண்ணே. |
பார்வதி வசனம்:
|
நாதா இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?
|
சிவன் வசனம்:
|
உனது தங்கை ஆங்காரமாரியிடம் சென்று நீ போட்ட முத்தின் வேதனை தாங்காது புலம்புகிறார் என்று சொல்லி, நீ போட்ட நோயை எடுக்கும்படி தெரிவித்து வா பெண்ணே.
|
பார்வதி வசனம்:
|
சரி நான் நான் சென்று வருகிறேன்.
|
பார்வதி பாடல்:
|
நானும் தங்காள் அரண்மனைக்கோ பார்வதியம்மன் – இப்போ
தானோடி வந்து நின்றா பார்வதியம்மன். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அக்காள் வாருங்கள் இவ்வாசனத்தில் அமருங்கள். எதற்காக வந்தீர்கள்?
|
பார்வதி வசனம்:
|
அடியே தங்காள் எனக்கு நாதன் உனக்கு அத்தார் அந்த ஆதி பரமேஸ்வரனுக்கு என்னவேலை செய்தாய்
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
என்ன வேலை செய்தேன் அக்கா.
|
பார்வதி வசனம்:
|
அவர் கழுத்திலிருக்கும் கண்டசுர மாலையை வாங்கியதி மட்டுமன்றி, அதில் உள்ள நோய்களையும் அவருக்கா போட்டுவிட்டாய். அவர் நோயின் வேதனை தாங்காது புலம்புகிறார். உடனடியாக அந்நோயை எடுத்து வருவாயாக.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
நான் அத்தார் மேல் போட்ட முத்தை எடுப்பதாய் இருந்தால் எனக்கு ஆகவேண்டிய பொங்கல், பூசை செய்து தரவேண்டும்.
|
பார்வதி வசனம்:
|
இவ்விடம் இருந்துகொள் பொங்கல், பூசை செய்து தருகின்றேன்.
|
பார்வதி பாடல்:
|
பொற்சருவம் தானெடுத்தோ பார்வதி அம்மன் – அவா
பொங்கல் உலை வாத்து வைத்தா பார்வதி அம்மன். பயற் கலந்தரிசி பார்வதி அம்மன் – அவா பக்குவமாய் உலையிலிட்டாள் பார்வதி அம்மன். ஈர்க்குப் போல் சம்பா தேடி பார்வதி அம்மன் – அவா இன்பமுடன் பொங்கல் செய்தா தங்கையர்க்குத் தானும். பத்துமுடாப் பொங்கல் செய்தோ பார்வதி அம்மன் – அவா பக்குவமாய் தான் படைத்தா தங்கையர்க்குத் தானும். |
பார்வதி வசனம்:
|
பொங்கல் செய்து படைத்துவிட்டேன் இனிமேல் பூமடை படைக்கவேண்டும்.
|
பார்வதி பாடல் :
|
கட்டோடு வெத்திலையாம் பார்வதி அம்மன் – அங்கே
கமுகோடிளம் பாக்காம் மாரிதேவிக்காக. கொப்போடு மாங்காய்களாம் பார்வதி அம்மன் – அவா குலையோடு செவ்விளனீர் தங்கையர்க்குத் தானும். வேரில் வெடித்ததொரு பார்வதி அம்மன் – அங்கே வெடியன் பலாப்பழமாம் தங்கையர்க்குத் தானும். ஈணாத வாழையிலே பார்வதி அம்மன் – அவா இடைக்கதலித் தேன் பழமாம் மாரிதேவிக்காக. கற்பூர தீபங்களாம் பார்வதி அம்மன் – நல்ல சாம்பிராணி வாசனையாம் மாரிதேவிக்காக. பொங்கல் பூசைதான் முடித்து பார்வதி அம்மன் – அவா தங்கையரைத்தான் நினைத்தாள் பார்வதி அம்மன். |
பார்வதி வசனம்:
|
தங்காள் உனக்கு ஆகவேண்டிய பொங்கல், பூசை செய்துவிட்டேன். பொங்கல் பூசையை ஏற்றுக்கொண்டு, அத்தார் மேல் போட்ட முத்தையும் எடுத்துக் கொண்டு பூலோகத்தின் கண் சென்று விளையாடி வாடி தங்காள்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அக்காள் ! இந்தப் பொங்கல் பூசை எனக்குத் தொட்டுத் திலகமிடக் கூடக் காணாது. எனக்கு அரபலியும், நரபலியும் தரவேண்டும்.
|
பார்வதி வசனம்:
|
தங்காள் என்னிடம் ஆடு, மாடு, கோழி இல்லை. ஆனபடியால் நீ நாலு திசையிலும் சுற்றிப்பார்த்து உனக்கு ஆகவேண்டிய அரபலியும், நரபலியும் எடுத்துக் கொண்டு, அத்தார் மேலிட்ட நோயை எடுத்துக்கொண்டு பூலோகம் சென்று விளையாடிவா கண்ணே.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி அப்படியே ஆகட்டும். நீங்கள் சென்றுவாருங்கள் அக்கா.
|
பார்வதி பாடல்:
|
தன்னுடைய மாளிகைக்கோ – பார்வதியம்மன்
தானோடிப் போறாவாம் பார்வதியம்மன். |
|
தொடரும்…..
|