தொடர் – 9
சண்முகநாதன் கஜேந்திரன்
மல்லர்கள் வசனம்:
|
அடியே கிழவி உன் குலதெய்வத்தை நினைத்துக் கழுத்தை நீட்டு. உன்னை வெட்டப் போறோம்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
இன்னும் சற்று நேரம் பேசாமல் இருப்பேனேயானால் என்னை வெட்டிப் போடுவார்கள்.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
சீறி எழுந்தல்லவோ முத்துமாரியம்மன் - உங்களை
சீகிரத்தில் பார்ப்பேனடா மல்லர்களே கேளும். நாராசம் காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும் - உங்கள் நடுச்செவியில் வைப்பேனடா மல்லர்களே கேளும். செப்பூசி காய்ச்சியெல்லோ மல்லர்களே கேளும் - உங்கள் திருச்செவியில் வைப்பேனடா மல்லர்களே கேளும். பொங்குதடா கோபமெல்லாம் மல்லர்களே கேளும் - எனக்குப் பொரியுதடா செந்தணலாய் மல்லர்களே கேளும். சீமாட்டி பிள்ளை பத்தும் மல்லர்களே கேளும் - நானும் குலை நெரிய வைப்பேனடா மல்லர்களே கேளும். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அடே! மல்லர்களே என்னை வெட்ட
வந்தனீர்கள் அல்லவா வெட்டி விடுங்கள். |
மல்லர்கள் வசனம்:
|
வெட்டமாட்டோம் தாயே!
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
எதற்காக?
|
மல்லர்கள் வசனம்:
|
இப்போதுதான் தாயார் என்று அறிந்தோம்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி சென்று வாருங்கள்.
|
மல்லர்கள் பாடல்:
|
அறியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள்
ஆச்சி பொறுத்திடணை. தெரியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள் ஆச்சி பொறுத்திடணை. அறியாமல் செய்த குற்றம் அம்மாவே -எங்கள் மாதா பொறுத்திடணை. மஅக்கள் நாம் செய்த குற்றம் அம்மாவே -எங்கள் ஆச்சி பொறுத்திடணை. முக்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும் அம்மாவை முடி வணங்கித் தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும். நாற்கால் வலமாய் வந்தோ மல்லர் இருபேரும் அம்மாவை நமஸ்கரித்தே தெண்டனிட்டோம் மல்லர் இருபேரும். கும்பிட்டோம் அம்மா என்று மல்லர் இருபேரும் அம்மாவை கோடி நமஸ்காரம் செய்தோம் மல்லர் இருபேரும். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
மல்லர்காள் எழுந்திருங்கள். நீங்கள் சென்று வாருங்கள்....
வைசூரராசன் பட்டணத்தை நீறு பொடியாய் எரித்து விட்டேன். இன்னும் ஆட்கள் இருக்கிறார்களோ என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதாக இருந்தால் இந்த வடிவத்தோடு செல்லக்கூடாது. ஒரு மாம்பழக்காரியைப் போல் வேடம் தாங்கித்தான் செல்ல வேண்டும். |
முத்துமாரியம்மன் பாடல்:
|
என்ன வடிவெடுத்தா முத்துமாரியம்மன்
எண்ணமற்ற சிந்தையிலே மாரிதேவி அம்மன். மாம்பழக்காரியைப் போல் முத்துமாரியம்மன் மறுவடிவோ தானெடுத்தாள் மாரிதேவி அம்மன். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி மாம்பழக்காரி வேசம் எடுத்து விட்டேன். இனி மாம்பழம் விலை கூறி வரவேண்டும்.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
கொள்வாருண்டோ, கொள்வாருண்டோ பெண்டுகளே - கேளும்
கொண்டு வந்த மாம்பழத்தை பெண்டுகளே வாங்கும். பணத்திற்கு மூன்று தாறேன் பெண்டுகளே - கேளும் இரண்டு சதத்திற்கு ஒன்று தாறேன் பெண்டுகளே வாங்கும். நல்ல பழமெடியோ பெண்டுகளே - கேளும் நல்ல மலிவெடியோ பெண்டுகளே வாங்கும். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
மாம்பழம் வாங்கவில்லையோ, மாம்பழம் வாங்கவில்லையோ....
|
கோப்பிலிங்கி வசனம்:
|
அம்மா! ஆரம்மா மாம்பழம் வேண்டப் போகிறார்கள்? இப்படித்தான் முன்னமொரு கிழவி வந்து, என் பத்தாவும் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். அத்துடன் என் பிள்ளைக்கும் சுகமில்லை மாம்பழம் வேண்டாம் அம்மா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி மாம்பழம் வாங்காவிட்டால்.... எனக்குத் தாகமாக இருக்கிறது ஏதாவது குடிக்கத் தருவாயா மகளே.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
நீர் மோரோ கொண்டுவந்து கோப்பிலங்கி - எனெக்கு
நித்தவிடாய் தீரெனடி. |
கோப்பிலங்கி பாடல்:
|
நீர் மோரோ கொண்டுவந்து அம்மாவே - உந்தன்
நித்தவிடாய் தீர்ப்பேன் அம்மா. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
பால் பழமோ கொண்டுவந்து கோப்பிலங்கி - எந்தன்
பசி தாகம் தீரெனடி. |
கோப்பிலங்கி பாடல்:
|
பால் பழமோ கொண்டுவந்து அம்மாவே - உந்தன்
பசி தாகம் தீர்ப்பேன் அம்மா. |
கோப்பிலங்கி வசனம்:
|
அம்மா பிள்ளையைப் பிடியுங்கள், நீர் மோர் கொண்டு வருகின்றேன்.
|