தொடர் – 10
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் வசனம்:
|
பிள்ளையைத் தாடி மகளே… கோப்பிலிங்கி நீர்மோர் எடுக்கச் சென்றுவிட்டாள். இப்பிள்ளையின் உயிரை எடுத்து ஒரு சிமிளில் அடைத்து வைப்போம், கோப்பிலிங்கிஎன்ன செய்கிறாள் பார்ப்போம்.
|
கோப்பிலிங்கி வசனம்:
|
அம்மா இதோ நீர்மோர். பிள்ளையைத் தாருங்கள்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
இதோ பிள்ளையைப் பிடி.
|
கோப்பிலிங்கி வசனம்:
|
என்னம்மா நான் தரும்போது தட்டிக்குதித்துத் தனபாரம் கொட்டிய பிள்ளை பிரேதம் போல் இருக்கிறது அம்மா?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அழுதாப்போல் மூச்சு அடங்கிவிட்டது.
|
கோப்பிலிங்கி வசனம்:
|
என்னம்மா! அழுதாப்போல் மூச்சு அடங்கிவிட்டதா? அம்மா ஐயோ அம்மா.
|
கோப்பிலிங்கி பாடல்:
|
முந்தித் தவமிருந்தேன் அம்மாவே – நானும்
முந்நூறு நாள் சுமந்தேன். அந்தி பகல் நாச்சியாரை அம்மாவே – நானும் அனுதிடமும் நேர்த்தி செய்தேன். வாதாடி வரம் இருந்தேன் அம்மாவே – எந்தன் வயிற்றில் செளித்த மைந்தன். கல்லு வைத்த கோவில் எல்லாம் அம்மாவே – நானும் கையெடுத்தோ நேர்த்தி செய்தேன். மழை மாரி போலிறங்கி அம்மாவே – எனக்கு மகனாக வந்ததம்மா. பாலர் பத்தும் பறிகொடுத்தேன் அம்மாவே – எந்தன் பத்தாவையும் நானிழந்தேன். ஒற்றை ஒருத்தியம்மா அம்மாவே – எனக்கு ஒருவர் துணை இல்லை அம்மா. |
கோப்பிலிங்கி வசனம்:
|
அம்மா என்னுடன் கொஞ்சம் அழக்கூடாதா?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
நான் அழுவதாயிருந்தால் கைக்கூலி தரவேண்டும்.
|
கோப்பிலிங்கி வசனம்:
|
கைக்கூலி தருகின்றேன் அழுங்கள் தாயே.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
கையாலே மகளே கையடித்தோ – எந்தன்
கை இரண்டும் புண்ணாக நோகுதடி. மார்போடே கோப்பிலிங்கி மார்படித்து – எந்தன் மார்பிரண்டும் புண்ணாக நோகுதடி. கையடித்த கோப்பிலிங்கி கூலியைத்தான் – எந்தன் காலடியில் கொண்டு வந்து தாவேனடி. |
கோப்பிலிங்கி பாடல்:
|
கையடித்த அம்மா கூலியைத்தான் – உங்கள்
காலடியில் அம்மாவே தாறேனணை. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
மார்படித்த கோப்பிலிங்கி கூலியைத்தான் – எந்தன்
மடிமேலே கோப்பிலிங்கி தாவேனடி. |
கோப்பிலிங்கி பாடல்:
|
மார்படித்த அம்மா கூலியைத்தான் – உங்கள்
மடிமேலே கொண்டுவந்து தாறேனணை. |
கோப்பிலிங்கி வசனம்:
|
அம்மா பிள்ளையை வைத்துக் கொள்ளுங்கள், திரவியம் எடுத்து வருகின்றேன்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி பிள்ளையைத் தா… கோப்பிலிங்கி பிள்ளையைத் தந்துவிட்டுத் திரவியம் எடுக்கச் செல்கின்றாள். சிமிளில் அடைத்து வைத்திருக்கும் உயிரை இப்பிள்ளையின் கண்ணே பாயவிடுவோம். கோப்பிலிங்கி என்ன செய்கின்றாள் பார்ப்போம்.
|
கோப்பிலிங்கி வசனம்:
|
அம்மா இதோ திரவியம் பிள்ளையைத் தாருங்கள்.
அம்மா நான் தரும்போது பிரேதம் போல் இருந்த பிள்ளை இப்போ தட்டிக் குதித்துத் தனபாரம் கொட்டுகிறதே அம்மா. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
நான் முன்னமே சொல்லவில்லையோ அழுதாற்போல் மூச்சடங்கி விட்டது என்று.
|
கோப்பிலிங்கி வசனம்:
|
அம்மா முற்றும் துறந்த ஞானியும் மறப்பரோ மக்கள்மேல் ஆசை என்றபடி, புத்திர சோகமானது யாரைத்தான் விடும் அம்மா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி நான் சென்று வருகின்றேன்.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
அந்தவனம் கடந்து முத்துமாரி அம்மன் – ஒரு
அப்பால் வனம் கடந்தேன் மாரிதேவி அம்மன். ஆலமரச் சோலை தேடி முத்துமாரி அம்மன் – அவ அருநிழலில் வந்து நின்றா மாரிதேவி அம்மன். |
|
தொடரும்…….
|