தொடர் – 11
சண்முகநாதன் கஜேந்திரன்
கோப்பிலிங்கி வசனம்:
|
மகனே சோமசுந்தரம்! நீ இப்பொழுது பாட்டனாரின் பள்ளிக்கூடம் சென்று படித்துவாடா மகனே.
|
சோமசுந்தரம் பாடல்:
|
கட்டமுது கட்டியெல்லோ சோமசுந்தரம் – நானும்
கடுகவழி தான் நடந்தார் தம்பியவர் தானும். சோமன் உடுத்தெல்லவோ சோமசுந்தரம் நானும் – ஒரு சொருகு தொங்கல் ஆர்க்க விட்டார் தம்பியவர் தானும். பாட்டனார் பள்ளிக்கூடம் சோமசுந்தரம் தானும் – இப்போ படிக்கவெல்லோ போறாரம் தம்பியவர் தானும். அந்தவனம் கடந்து சோமசுந்தரம் தானும் – ஒரு அப்பால் வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும். ஓங்கி வளர்ந்தவனம் சோமசுந்தரம் தானும் – ஒரு மூங்கில் வனம் தான் கடந்தார் தம்பியவர் தானும். சிங்கம் உறஙும் வனம் சோமசுந்தரம் தானும் – ஒரு சிறு குரங்கு தூங்கும் வனம் தம்பியவர் தானும். ஆலமரச் சோலை தேடி சோமசுந்தரம் தானும் – அவர் அரு நிழலில் வந்து நின்றார் தம்பியவர் தானும். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே! எங்கு செல்லுகின்றாய்?
|
சோமசுந்தரம் வசனம்:
|
தாயார் வீட்டில் இருந்து பாட்டனாரின் பள்ளிக்கூடத்தில் படிக்கச் செல்கின்றேன் அம்மா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே! கையிலே என்ன வைத்திருக்கின்றாய்?
|
சோமசுந்தரம் வசனம்:
|
கட்டமுது தாயே!
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே எனக்கு நாலு ஐந்து நாள் பசி, எனக்கு கொஞ்சம் தரக்கூடாதா?
|
சோமசுந்தரம் வசனம்:
|
அம்மா இருவருக்கும் காணாது தாங்களே சாப்பிடுங்கள்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி நல்லது தரையை மெழுகடா மகனே.
|
சோமசுந்தரம் வசனம்:
|
அப்படியே மெழுகினேன் அம்மா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அன்னத்தைக் கொட்டடா மகனே.
|
சோமசுந்தரம் வசனம்:
|
அப்படியே கொட்டினேன் அம்மா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அன்னத்தைக் காலால் உளக்கடா மகனே.
|
சோமசுந்தரம் வசனம்:
|
அம்மா அன்னமல்லவா எங்களை வளர்த்தது.
ஆதலால் காலால் உளக்கமாட்டேன். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
நான் பொறுத்துக்கொண்டேன். உளக்கடா மகனே.
|
சோமசுந்தரம் வசனம்:
|
அப்படியே உளக்கினேன்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
மூன்று திரணையாய் திரட்டடா மகனே.
|
சோமசுந்தரம் வசனம்:
|
அப்படியே திரட்டினேன் அம்மா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஒன்றை எடுத்து எனது வாயில் போடடா மகனே.
|
சோமசுந்தரம் வசனம்:
|
அம்மா பயமாய் இருக்கின்றது.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
என்ன மகனே கண்டாய்?
|
சோமசுந்தரம் வசனம்:
|
ஆயிரம் பிராமணர்கள் கூடி அக்கினிப் பொறி மூட்டி எரிக்கிறார்கள்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே எனக்குப் பேன் அதிகம். ஒரு பேன் எடு மகனே.
|
சோமசுந்தரம் வசனம்:
|
அம்மா பயமாய் இருக்கின்றது.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே என்ன கண்டாய்?
|
சோமசுந்தரம் வசனம்:
|
தலையெல்லாம் கண்களாய் இருக்கின்றது.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
நான் தான்ஆயிரம் கண்ணுள்ள ஆங்காரமாரி.
நீ உன் ஊரிலே இறந்தவர்களை எழுப்படா மகனே. |
சோமசுந்தரம் வசனம்:
|
எல்லோரையும் எழுப்புவேன் எனது தந்தையை எழுப்பமாட்டேன்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
எதற்காக எழுப்பமாட்டாய்?
|
சோமசுந்தரம் வசனம்:
|
அவர் என்னாலேதான் இறந்ததென்று எண்ணி என்னை வெட்டிவிடுவார் அம்மா.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அப்பொழுது "வழியில் கண்ட மாதாவே" என்று நினை. அந்த நேரம் வந்து உதவுகின்றேன்,
|
சோமசுந்தரம் பாடல்:
|
சுடுகாடு தேடியெல்லோ சோமசுந்தரம் நானும் – இப்போ
சுறுக்குடனே போறாராம் தம்பியரும் நான் தான். இடுகாடு தேடியெல்லோ சோமசுந்தரம் நானும் – இப்போ இன்பமுடன் போறாராம் தம்பியரும் நான் தான். அண்ணன்மாரை எழுப்பவென்றோ சோமசுந்தரம் நானும் – வெகு அன்புடனே போறாராம் தம்பியரும் நான் தான். தந்தையாரை எழுப்பவென்றோ சோமசுந்தரம் நானும் – இப்போ தானோடிப் போறாராம் தம்பியரும் நான் தான். |
சோமசுந்தரம் வசனம்:
|
அண்ணன்மாரே எழுந்திருங்கள்! தந்தையே எழுந்திருங்கள்!
|
வைசூரராசன் வசனம்:
|
அடே சண்டாளா! உன்னால்தான் நாங்கள் எல்லோரும் இறந்தோம். இதோ உன்னை வெட்டப் போகின்றேன்.
|
வைசூரராசன் பாடல்:
|
பத்துப் பேருக்கு இளையதொரு என் மகனே பாலா – நீயும்
பாதகனாய் வந்தாயோடா என்மகனே பாலா. சுருள் வாள் எடுத்தல்லவோ என் மகனே பாலா – உன்னை சுறுக்குடனே வெட்டுறன் பார் என்மகனே பாலா. அடே தப்பிதங்கள் செய்தாயோடா என் மகனே பாலா – உன் தலையை வெட்டிப் போடுறன்பார் என்மகனே பாலா. |
சோமசுந்தரம் பாடல்:
|
நானும் தப்பிதங்கள் செய்யவில்லை தந்தையரே கேளும்
என் தலையை வெட்டிப் போடவேண்டாம் தந்தையரே கேளும். |
வைசூரராசன் பாடல்:
|
அடே வஞ்சகங்கள் செய்தாயோடா என் மகனே பாலா
உன்னை வாளாலே வெட்டுறன்பார் என் மகனே பாலா. |
சோமசுந்தரம் பாடல்:
|
நானும் வஞ்சகங்கள் செய்யவில்லை தந்தையரே கேளும்
என்னை வாளாலே வெட்ட வேண்டாம் தந்தையரே கேளும். தகப்பன் கோபத்தைக் கண்டெல்லவோ சோமசுந்தரம் நானும் இப்போ வழியில் தாயாரை தான் நினைந்தேன் தம்பியர் தானும். வழியில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே – எனக்கு வந்துதவி செய்யேனம்மா உத்தமியே தாயே. தெருவில் கண்ட மாதாவே பெற்றவளே தாயே – எனக்கு தரிசனமோ தாவேனம்மா உத்தமியே தாயே. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அடே ராசனே! உனது கர்வத்தை அடக்கி மக்களையும் கூட்டிச் சென்று, சந்தோசமாக இராச்சியத்தை ஆளுங்கள். நான் சென்று வருகின்றேன்.
|
சோமசுந்தரம் பாடல்:
|
தந்தையாரைக் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம் - தானும்
இப்போ தானோடிப் போறாராம் தம்பியவர் தானும். அண்ணன் மாரைக் கோட்டிக்கொண்டு சோமசுந்தரம் – நானும் இப்போ அன்புடனே போறாராம் தம்பியவர் தானும். எல்லோரையும் கூட்டிக்கொண்டு சோமசுந்தரம் நானும் – இப்போ இன்பமுடன் போறாராம் சபையோரே கேளும். |
|
தொடரும்…..
|