தொடர் – 12
சண்முகநாதன் கஜேந்திரன்
நாரதர் பாடல்:
|
சம்போ சங்கர ரட்சக தீசா டாள் பணிந்தேன் கைலாச வாசா
அம்பிகை வாசா ஆனந்தத் தேவா அருள் புரிந்தென்னை ஆளுவாய் நேசா. பரந்த சடையும் முப்புரி நூலும் பஞ்சாட்சரமும் துலங்கவே நடந்து விசிறி கையினில் ஏந்திய நாரதமுனி தோற்றினார். காவி உடுத்துக் கணைகள் தொடுத்துக் கையில் நல்ல விசிறி பிடித்து தூய புலித்தோல் ஆடை தரித்து துலங்கு தண்டிகை மாலை அணிந்து துஷ்ட நாரதர் தோற்றினார். |
நாரதர் வசனம்:
|
நாராயணா! நாராயணா!
ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது சொல்லாவிட்டால் எனது தலை ஆயிரம் சுக்குநூறாய் வெடித்து விடும். இன்றைக்கு இவ்விடம் ஒரு விசேசத்தையும் காணவில்லை. கைலயங்கிரிப் பக்கம் சென்று பார்ப்போம். நாராயணா! நாராயணா! |
சிவன் வசனம்:
|
எனது மைத்துனரை நீண்ட நாட்களாகக் காணோம். இன்று அவரை அழைத்து உரையாடிப் பார்ப்போம்…….
கோபாலா! நாராயணா! கண்ணா! |
சிவன் பாடல்:
|
தோளோடே தோள் உதித்த தோள் உதித்த – எந்தன்
தோழமையே வாவேன் கிருஷ்ணா. மார்போடே மார்பணைந்த மார்பணைந்த – எந்தன் மைத்துனரே வாவேன் கண்ணா. ஆலிலை மேல் பள்ளி கொள்ளும் பள்ளி கொள்ளும் – எந்தன் அரிராமா வாவேன் இங்கே. பாம்பணை மேல் பள்ளி கொள்ளும் பள்ளி கொள்ளும் – எந்தன் பரந்தாமா வாவேன் இங்கே. |
சிவன் வசனம்:
|
கண்ணா! மைத்துணா!! அங்கு பார்த்தால் பச்சை நிறம், இங்கு பார்த்தால் நீல நிறம், மணி வண்ணா ஓடிவா!
|
சிவன் பாடல்:
|
பார்க்கின்ற இடங்களில் எல்லாம்- உந்தன்
பச்சை நிறம் தோணுது கண்ணா. நீ நிக்கின்ற இடங்களில் எல்லாம் - உந்தன் நீல நிறம் தோணுது கண்ணா. கண்ணா! கண்ணா!! கண்ணா!!! |
கிருஷ்ணர் பாடல்:
|
பாம்பணையை விட்டிறங்கிக் கிட்டிணரும் நான்தான் – இப்போ
பரந்தாமன் ஓடிவாறேன் மாயவனும் நான்தான். ஆலிலையை விட்டிறங்கிக் கிட்டிணரும் நான்தான் – அந்த அரிராமன் ஓடிவாறேன் மாயவனும் நான்தான். கன்னிகள் துகில் எடுக்கும் கிட்டிணரும் நான்தான் – அந்தக் கள்வனும் நான் ஓடிவாறேன் மாயவனும் நான்தான். பாற்கடலில் பள்ளி கொள்ளும் கிட்டிணரும் நான்தான் – அந்தப் பரந்தாமன் ஓடிவாறேன் மாயவனும் நான்தான். நீல நிறத்துக்குள்ளே கிட்டிணரும் நான்தான் – இப்போ நிமிஷமொரு வடிவெடுப்பேன் மாயவனும் நான்தான். பச்சை நிறத்துக்குள்ளே கிட்டிணரும் நான்தான் – இப்போ பதினாயிரம் வடிவெடுப்பேன் மாயவனும் நான்தான். சிவனார் வரவழைத்தார் எந்தனை இப்போது – வெகு சீக்கிரமாய் போயறிவேன் மாயவனும் நான்தான். அரணார் வரவழைத்தார் எந்தனை இப்போது – வெகு அன்புடனே போயறிவேன் மாயவனும் நான்தான். |
கிருஷ்ணர் வசனம்:
|
மைத்துணா! எதற்காக என்னை அவசரமாக அழைத்தீர்கள்?
|
சிவன் வசனம்:
|
கோபாலா! உனது தங்கை, எனது மைத்துணி அந்த ஆங்கார மாரி இருக்கிறாள் அல்லவா?
|
கிருஷ்ணர் வசனம்:
|
ஆமாம் இருக்கிறாள் மைத்துணா!
|
சிவன் வசனம்:
|
அவள் என்னிடம் இருந்த கண்டசுர மாலையை வாங்கியது மட்டுமன்றி அதிலிருந்த நோய்களையும் எனக்கே போட்டாள் மைத்துணா. அது மட்டுமன்றி உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு இடுக்கண் செய்து வருகின்றாள். அவள் அகங்காரத்தை அடக்குவதற்காகவே அழைத்தேன்.
|
கிருஷ்ணர் வசனம்:
|
மைத்துணா! நானும் அவள் அகங்காரம் பற்றி அறிந்திருக்கின்றேன். அவள் அகங்காரத்தை அடக்குவதாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும் மைத்துணா?
|
சிவன் வசனம்:
|
அந்த மாரிக்குக் கொடிய சாபங்களை இடவேண்டும் கிருஷ்ணா.
|
கிருஷ்ணர் வசனம்:
|
நல்ல யோசனை ஆனால் எவ்வாறான சாபங்களை போடலாம் மைத்துணா?
|
சிவன் வசனம்:
|
அவளுக்குப் பிள்ளை இல்லை என்றும், கலியாணாம் இல்லை என்றும் நாம் இருவரும் சாபங்களை போடவேண்டும்,
|
கிருஷ்ணர் வசனம்:
|
நல்லது மைத்துணா, நீங்களே முதலில் போடுங்கள்.
|
சிவன் வசனம்:
|
சரி நானே முதலில் போடுகின்றேன்.
|
சிவன் பாடல்:
|
கலியாணாம் இல்லையென்று – நானும்
கடுஞ்சாபம் போட்டேன் கண்ணா. |
கிருஷ்ணர் பாடல்:
|
மைந்தன் வரம் இல்லையென்று – நானும்
மறுசாபம் போட்டேன் அத்தார். |
சிவன் பாடல்:
|
பிள்ளை வரம் இல்லையென்று – நானும்
பெருஞ்சாபம் போட்டேன் கண்ணா. |
கிருஷ்ணர் பாடல்:
|
மணமாலை இல்லையென்று – நானும்
மறுசாபம் போட்டேன் அத்தார். |
சிவன் பாடல்:
|
மலடியோ மலடி என்று – நானும்
மறுசாபம் போட்டேன் கிருஷ்ணா |
கிருஷ்ணர் பாடல்:
|
இருளியோ இருளியென்று – நானும்
இட்டேன் காண் சாபமொன்று. |
சிவன் பாடல்:
|
சந்தானம் இல்லையென்று – நானும்சரியான சாபமிட்டேன்.
|