தொடர் – 13
சண்முகநாதன் கஜேந்திரன்
நாரதர் வசனம்:
|
நாராயணா! நாராயணா!!
|
சிவன் வசனம்:
|
கோபாலா வெளியில் நாரதரின் சத்தம் கேட்கின்றது, போய் அறிந்து வாருங்கள்.
|
கிருஷ்ணர் வசனம்:
|
நாரதா எதற்காக வந்தாய்?
|
நாரதர் வசனம்:
|
நாடு நகரம் பார்க்கலாம் என வந்தேன்.
|
கிருஷ்ணர் வசனம்:
|
வந்து வெகு நேரம் ஆகுமோ?
|
நாரதர் வசனம்:
|
இப்பொழுது தான் வந்தேன்.
|
கிருஷ்ணர் வசனம்:
|
நாரதா! நானும் சிவனாரும் கதைத்த கதைகள் ஏதாவது உனக்கு கேட்டிருக்குமா?
|
நாரதர் வசனம்:
|
கேட்டுமிருக்கும் கேளாமலும் இருக்கும்.
|
கிருஷ்ணர் வசனம்:
|
அவ்வாறு கேட்டிருந்தால் அவற்றை அந்த மாரிக்கு தெரிவியாது விடுவாயா?
|
நாரதர் வசனம்:
|
தெரிவிக்காது விடுவதாய் இருந்தால் சுவாமியின் கழுத்திலிருக்கும் பஞ்சாட்சர மாலையைத் தந்தால் தெரிவிக்க மாட்டேன்.
|
கிருஷ்ணர் வசனம்:
|
நாரதா இதோ கொண்டு வருகின்றேன்……
மைத்துணா நாங்கள் அந்த மாரிக்குப் போட்ட சாபங்களை நாரதன் கேட்டு இருக்கிறார். |
சிவன் வசனம்:
|
மைத்துணா! எங்களைப் போல மடையர் உலகத்தில் எவரும் இல்லை. நாரதர் வந்திருக்கின்றார் என்பதை யோசியாது, அந்த மாரிக்குக் கொடிய சாபங்களைப் போட்டு விட்டோம். இதனால் என்ன துன்பம் நேருமோ…..
சரி பின் என்ன சொன்னான்? |
கிருஷ்ணர் வசனம்:
|
அந்தச் சாபங்களை மாரிக்குச் சொல்லாது விடுவதாக இருந்தால், தங்கள் கழுத்தில் இருக்கும் பஞ்சாட்சர மாலையைக் கேட்கின்றார்.
|
சிவன் வசனம்:
|
சரி இதோ பஞ்சாட்சர மாலை. கொண்டுபோய்க் கொடுத்து, அந்த மாரிக்குச் சொல்லாது தடுத்து வா மைத்துணா.
|
கிருஷ்ணர் வசனம்:
|
அப்படியே செய்கிறேன்….
நாரதா, இதோ பஞ்சாட்சர மாலை பெற்றுக்கொள். மறந்தும், மறவாமலும் இந்தச் சாபங்களை அந்த மாரிக்குத் தெரிவிக்க வேண்டாம், நான் சென்று வருகின்றேன். |
நாரதர் வசனம்:
|
அப்படியே செய்கிறேன் சுவாமி….
ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது சொல்லாவிட்டால் எனது தலை ஆயிரம் சுக்குநூறாய் சிதறிவிடும், இன்று சிவனாரும், கிருஷ்ணரும் கதைத்த கதைகளை எல்லாம் மாரியிடம் ஓடிப்போய் சொல்லவேண்டும். |
நாரதர் பாடல்:
|
மாயன் உரைத்த கதை தனையே – அந்த
மாரிக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன். சிவனார் உரைத்த கதை தனையே – அந்தத் தேவிக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன். ஆயன் உரைத்த கதை தனையே – அந்த ஆச்சிக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன். அரணார் உரைத்த கதை தனையே – அந்த அம்மைக்கெல்லோ ஓடிச் சொல்லப் போறேன். |
நாரதர் வசனம்:
|
நாராயணா! நாராயணா!!
|
நாரதர் வசனம்:
|
நாராயணா! நாராயணா!! தாயே நமஸ்கரிக்கின்றேன்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
நாரதா எதற்காக வந்தாய்?
|
நாரதர் வசனம்:
|
நாடு, நகரம் பார்க்கலாம் என்று வந்தேன்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
எப்படி இருக்கின்றது நாரதா?
|
நாரதர் வசனம்:
|
நன்றாக இருக்கின்றது தாயே.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
வேறு ஏதாவது விசேடங்கள் இருக்குமா?
|
நாரதர் வசனம்:
|
இருக்கின்றது தாயே.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
என்ன கோள் கொண்டு வந்தாய் – நாரத மாமுனியே
ஏது கோள் கொண்டு வந்தாய். |
நாரதர் பாடல்:
|
சொல்லப் பயமாகுதே தோணுதே – எந்தனிற்கு
சொல்லப் பயமாகுதே. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
வந்ததைச் சொல் முனியே - நாரத மாமுனியே
வந்ததைச் சொல் முனியே. |
நாரதர் பாடல்:
|
சொல்லப் பயமாகுதே தோணுதே – எந்தனிற்கு
சொல்லப் பயமாகுதே. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
சூது வாது பேசி நாரதா மோசப்பட வேண்டாம்.
சூது வாது பேசி நாரதா மோசப்பட வேண்டாம். |
நாரதர் வசனம்:
|
சொல்லுகிறேன் தாயே….
உங்கள் மைத்துனரும், தமையனாரும் தங்களிற்குப் பல விதமான சாபங்களைப் போட்டிருக்கின்றார்கள் தாயே. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
எப்படியான சாபங்கள் நாரதா?
|
நாரதர் பாடல்:
|
கலியாணம் இல்லையென்று – கொத்தார்
கடுஞ்சாபம் போட்டார் அம்மா. ம்ணமாலை இல்லையென்று – கொண்ணர் மறுசாபம் போட்டார் அம்மா. பிள்ளை வரம் இல்லையென்று – கொத்தார் பெருஞ்சாபம் போட்டார் அம்மா. மைந்தன் வரம் இல்லையென்று – கொண்ணர் மறுசாபம் போட்டார் அம்மா. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
நாரதா இதற்கு விமோசனம் உண்டா?
|
நாரதர் வசனம்:
|
இருக்கின்றது தெரிவிக்கின்றேன் கேளுங்கள் தாயே.
|
நாரதர் பாடல்:
|
கருத்தின் நல்ல என்னம்மா வலிமையினால் - நீயும்
ஒரு கலியாண வரம் தாயாரே கேளேனம்மா. கருத்தின் நல்ல என்னம்மா வலிமையினால் - நீயும் ஒரு பிள்ளை வரம் தாயாரே கேளேனம்மா. |
நாரதர் வசனம்:
|
அம்மா இதுதான் உபாயம். நான் சென்று வருகின்றேன் தாயே.
நாராயணா! நாராயணா!! நாராயணா!!! |
முத்துமாரியம்மன் வசனம்:
|
நீ சென்று வா நாரதா….
அத்தாரின் கெட்டித்தனத்தை ஒரு கை பார்க்க வேண்டும். புடையன் பாம்பை வெட்டி, கஞ்சாப்பயிர் உண்டுபண்ணி, அத்தாரின் கெட்டித்தனத்தை ஒரு கை பார்க்கின்றேன். |