
தொடர் – 14
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
|
மந்திரவாள் தானெடுத்தோ முத்துமாரியம்மன் – நானும்
மாட்டிக் கொண்டேன் உறைதனிலே மாரிதேவி அம்மன் திரை – வயல் போகும் வழி தனிலே முத்து மாரி அம்மன் – ஒரு புடையன் பாம்பைக் கண்டு கொண்டாள் மாரிதேவி அம்மன் புடையன் பாம்பைக் கண்டல்லவோ முத்துமாரி அம்மன் – பாம்பின் கழுத்தோடே தானரிந்தாள் மாரிதேவி அம்மன் கழுத்தோடு தானரிந்து முத்துமாரி அம்மன் – பாம்பின் கண்ணிரண்டும் தோண்டலுற்றாள் மாரிதேவி அம்மன் |
முத்துமாரியம்மன் வசனம்
|
பாம்பினுடைய கண்களை நிலத்திலே புதைக்க வேண்டும்.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
மண்வெட்டி தானெடுத்தோ முத்துமாரி அம்மன் – மண்ணை
மளமளென்று வெட்டலுற்றேன் மாரிதேவி அம்மன் பாம்புக் கண்ணை உரமாக்கி முத்துமாரி அம்மன் – கஞ்சாப் பயிர் நாட்டி வளர்க்கலுற்றேன் மாரிதேவி அம்மன் வாய்க்கால் வரம்பு கட்டி முத்துமாரி அம்மன் வடிவாக நீரிறைத்தாள் மாரிதேவி அம்மன் |
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஆஹா ! பயிர்கள் எல்லாம் நன்றாக வளர்ந்திருக்கின்றன.
நல்லது, ஒரு பாத்தியில் பூவன் கஞ்சாவும், மறு பாத்த்யில் சடையன் கஞ்சாவும் இருக்கின்றது. |
முத்துமாரியம்மன் பாடல்:
|
கஞ்சா இலை பிடுங்கி முத்துமாரி அம்மன் – இப்போ
கையுறுண்டைசெய்யலுற்றேன் மாரிதேவி அம்மன். சிற்றுண்டி வாய்ப்பனொடு முத்துமாரி அம்மன் – நல்ல சீனிப் பணியாரங்களாம் மாரிதேவி அம்மன் அரியதரம் சுட்டல்லவோ முத்துமாரி அம்மன் – நானும் அத்தாரிடம் போகலுற்றேன் மாரிதேவி அம்மன் அரனாரைத் தேடியெல்லொ முத்துமாரி அம்மன் அதி சுறுக்குடனே தான் நடந்தாள் மாரிதேவி அம்மன் சிவனாரின் மாளிகையில் முத்துமாரி அம்மன்– வெகு சீக்கிரமாய் வந்தும் நின்றேன் மாரிதேவி அம்மன் |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அத்தாரே! நமஸ்கரிக்கின்றேன்.
|
சிவன் வசனம்:
|
அடிப்பாவி, முன்பு போட்ட முத்தின் வேதனை இன்னமும் தீரவில்லை மறுபடியும் ஏன் வந்தாய்?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அன்று நடந்ததை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அத்தாரே தங்களை நலம் விசாரித்துச் செல்வதற்காக ஒரு விதமான பலகாரத்துடன் வந்திருக்கிறேன்.
|
சிவன் வசனம்:
|
அத்தனை கரிசனையா? நம்ப முடியவில்லை. சரி என்ன பலகாரம் கொண்டு வந்திருக்கின்றாய்?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அத்தாரே! சீனி அரியதுரமும், சிற்றுண்டி வாய்ப்பனும்.
|
சிவன் வசனம்:
|
முதலில் உன் அக்காவிற்குக் கொண்டு சென்று கொடுப்பாயாக.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அக்காவிற்கும் கொடுத்து விட்டுத்தான் வருகின்றேன்;
|
சிவன் வசனம்:
|
சரி, கையில் கொடு பார்க்கலாம்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அத்தாரே கையில் கொடுத்தால் கரைந்துவிடும் அத்தாரே.
|
சிவன் வசனம்:
|
அப்படியென்றால் எப்படி நீ அதை வைத்திருக்கின்றாய்?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
பட்டுப் பீதாம்பரத்தில் சுற்றி வைத்திருக்கின்றேன்.
|
சிவன் வசனம்:
|
அப்படியானால் என்ன செய்யப் போகின்றாய்?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
தங்கள் வாயில்தான் போடவேண்டும் அத்தாரே!
|
சிவன் வசனம்:
|
சரி போடு பார்க்கலாம்.
(முத்துமாரி சிவனின் வாயில் சிற்றுண்டியை ஊட்டும்போது ஒற்றைத் தும்மல் ஒலித்தல்) பெண்ணே ஒற்றைத் தும்மலாக இருக்கின்றது. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஒற்றுமைக்குத் தான் அத்தாரே!
|
சிவன் வசனம்:
|
யாருக்கும் யாருக்குமிடையே ஒற்றுமை?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஆங்கார மாரிக்கும் ஆதி பரமேஸ்வரனுக்கும் இடையிலான ஒற்றுமை.
|
சிவன் வசனம்:
|
சரி இனிப் போடு பார்க்கலாம்.
(முத்துமாரி சிவனின் வாயில் சிற்றுண்டியை ஊட்டும்போது உச்சத்தில் பல்லி சொல்லுதல்) பெண்ணே உச்சத்தில் பல்லி சொல்கிறதே? |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அத்தாரே உச்சத்தில் பல்லி அச்சமில்லை.
|
சிவன் வசனம்:
|
யாருக்கு அச்சமில்லை.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
எனக்கும் அத்தாருக்கும்.
|
சிவன் வசனம்:
|
ஏதேதோவெல்லாம் கூறுகின்றாய் பரவாயில்லை. பெண்ணே போடு பார்க்கலாம்.
(சிறிது இடைவெளிக்குப் பின் சிவனிற்கு தலை சுற்றுதல்) பெண்ணே, எனது தலை சுற்றுகின்றது. எனது தலையைப் பிடித்து விடு பெண்ணே. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அப்படியே பிடித்துவிட்டேன் அத்தாரே.
(முத்துமாரி தனது தலையைப் பிடித்தல்) |
சிவன் வசனம்:
|
அடிபாவி! எனது தலையைப் பிடித்து விடும்படி கூற நீ, உனது தலையைப் பிடிக்கின்றாய்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
எனது தலையைப் பிடித்தால் அத்தாரிற்குத் தலைச்சுற்று நின்று விடும்.
|
சிவன் வசனம்:
|
பெண்ணே! எனது நெஞ்சு வலிக்கின்றது. ஒரு முறை என் நெஞ்சைத் தடவிவிடு பெண்ணே!
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அப்படியே தடவினேன் அத்தாரே!
(முத்துமாரி தனது நெஞ்சைத் தடவுதல்) |
சிவன் வசனம்:
|
அடியே சண்டாளி, எனது நெஞ்சைத் தடவச் சொல்ல உனது நெஞ்சையா தடவுகின்றாய்?
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
எனது நெஞ்சைத் தடவினால் அத்தாரிற்கு சுகம் வரும்.
|
சிவன் வசனம்:
|
சிறிது நேரத்தின் பின்) பெண்ணே எனது தலை சுற்றுகின்றது… எனக்கு ஒரு விதமான மயக்கம் வருகின்றது…
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
அத்தார் சுற்றுகிறார் ஆசை அத்தார் சுழலுகிறார் – ஆடும்
பம்பரம் போல் சுழன்று தான் விழுந்தார். அத்தார் தத்துகிறார் ஆசை அத்தார் தவழுகிறார் – அப்படி தவண்டு மெல்லோ தரையில்தான் விழுந்தார். |