தொடர் – 16
சண்முகநாதன் கஜேந்திரன்
சிவன் வசனம்:
|
பெண்ணே! நீ, அந்த வைகைக் கரையோரம் சென்று அங்கே அகோர உன்னத தவம் இருக்க வேண்டும். அவ்வாறு நீ தவமியற்றும் தருணம் உனது அண்ணரும் எனது மைத்துனருமாகிய மகா விஷ்ணு அழகிய பெண்மானாகவும், இந்த ஆதி பரமேஸ்வரன் அழகிய கலைமானாகவும் உருப் பெற்று....
|
சிவன் பாடல்:
|
நானுமொரு பெண்ணே கலையாகி - உந்தன்
தமையன் கிருஷ்ணன் ஒரு மானாகி தவத்தடியைப் பெண்ணே தேடி வந்து - நாங்கள் தருவோமடி சின்ன மான் குழந்தை |
முத்துமாரியம்மன் வசனம்:
|
அத்தாரே எனக்கு மான் குழந்தை எதற்கு?
|
சிவன் வசனம்:
|
பெண்ணே உனது தவத்தடியில் அழுகைக்குரலோடு காட்சிதரும் அந்த மான்கன்றை உன் திருக்கரங்கள் ஏந்தும் வேளை அது ஓர் அழகிய ஆண் குழந்தையாக மாறி உன்னை மகிழ்விக்கும்.
|
சிவன் பாடல்:
|
பிள்ளை என்றோ பெண்ணே நீ எடுக்க - மிக்க
பிரியமுடனே மாரி நீ வளர்ப்பாய் மைந்தன் என்றோ மகவை நீ அணைத்து - மன மகிழ்வுடனே மாரி நீ வளர்ப்பாய் |
சிவன் வசனம்:
|
மாரி! மான் குழந்தையாக வரும் அந்த ஆண் குழந்தையை மகிழ்வோடு அணைத்திடுவாயாக. மங்களம் உண்டாகட்டும். நல்லது, நான் சென்று வருகின்றேன்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அத்தார் சொன்ன முறைப்படி வைகைக் கரையோரம் சென்று அத்தாரை நினைந்து தவமியற்ற வேண்டும். இதோ வைகைக் கரையோரம் செல்கின்றேன்.
|
திரை - ஆற்றங்கரை
|
திரை - ஆற்றங்கரை
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
மூன்று குளம் தான் முழுகி முத்து மாரி அம்மன்
முக் கண்ணரைத் தோத்தரித்தேன் நான்கு குளம் தான் முழுகி முத்து மாரி அம்மன் நாயகனைப் போற்றி செய்தேன் ஐந்து குளம் தான் முழுகி முத்து மாரி அம்மன் அரனாரைத் தோத்தரித்தேன் அரஹரா என்று சொல்லி முத்துமாரி அம்மன் அணிந்து கொண்டேன் சிவ ருத்திராட்சம் சிவ சிவா என்று சொல்லி முத்துமாரி அம்மன் திரு நீற்றால் காப்பு மிட்டேன் சேற்று மணல் தேடி வந்து முத்துமாரி அம்மன் சிவனாரை உண்டு பண்ணி ஆற்று மணல் அள்ளி வந்து முத்துமாரி அம்மன் அரனாரை ஆக்குவித்தேன் |
மைந்தன் வரம் வேண்டி முத்துமாரி தவமியற்றல்:
|
அம்மன் இருந்தாள் அருந்தபசு முத்துமாரி அம்மன்
எழிலுலகம் சோதி மின்ன சிவனாரைத் தான் நினைத்தோ முத்துமாரி அம்மன் சிவதபசு நானிருந்தேன் அரனாரை அகம் நினைந்து முத்துமாரி அம்மன் அருந்தபசு தானிருந்தேன் ஊசி முனை மேலமர்ந்தோ முத்துமாரி அம்மன் உற்ற தவம் செய்யலுற்றேன் கம்பமுனை மீதமர்ந்தோ முத்துமாரி அம்மன் கடுந்தவமோ செய்யலுற்றேன் பிள்ளை வரம் வேண்டுமென்று முத்துமாரி அம்மன் பெருந்தபசு தானிருந்தேன் மைந்தன் ஒன்று வேண்டுமென்று முத்துமாரி அம்மன் மகதபசு தானிருந்தேன் அம்மன் இருந்தேன் அருந்தபசு முத்துமாரி அம்மன் அகிலமெல்லாம் எதிரொலிக்க |
முத்துமாரி அம்மனின் தவத்தடியில் ஆண்மானாகவும், பெண்மானாகவும் வடிவு கொண்ட சிவபெருமானும், மஹாவிஷ்ணுவும் ஒன்றிணைந்து மான் கன்று ஒன்றினை உற்பவித்து அருள் கொடுத்தல் குழந்தையின் அழுகை ஒலி எதிரொலித்தல்.
முத்துமாரியம்மன் வசனம்:
|
எனது தவத்தடியில் ஓர் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. எதற்கும் தவத்தை விட்டு இறங்கிப் பார்ப்போம்.
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
பூமியிலே காலை வத்து - அம்மன்
போதரவாய்த் தானிறங்கி மண்மேலே காலை வைத்தோ - அம்மன் மகிழ்ச்சியுடன் தானிறங்கி வாரி அணைத்தல்லவே - எந்தன் வண்ண மடி மேலமர்த்தி கட்டி அணைத்தல்லவே - நானும் கன்னமிட்டுக் கொஞ்சலுற்றேன். |
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஆஹா! என்ன அழகிய ஆண் குழந்தை. பிள்ளையைத் தாலாட்ட வேண்டும்.
|
|
தொடரும்.....
|