தொடர் – 18
சண்முகநாதன் கஜேந்திரன்
மல்லர்கள் வசனம்:
|
அம்மா! இதோ தொட்டில் கொண்டு வந்திருக்கின்றோம்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
ஆஹா! அழகான தொட்டில். பிள்ளையைத் தொட்டிலிலிட்டு ஆராட்டுவோம்.
|
|
தாலாட்டு
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
ஆராரோ ஆரிவரோ தம்பியரே - எந்தன்
ஆரமுதே கண் வளராய் தங்கப் பொன் தொட்டிலிலே என் துரையே - நீரும் தலை மகனாய் வந்தாயோடா முத்துப் பொன் தொட்டிலிலே என் மகனே - நீயும் முதல் மகனாய் வந்தாயோடா சிற்ப எழில் தொட்டிலிலே என் மகனே - நீயும் சிறு மகவாய் வந்தாயோடா தொட்டில் பிடித்து ஆட்ட தம்பியரே - உனக்குத் தொண்ணூறு பேர் தாதிமார்கள் மலடிக்கு ஓர் குழந்தை என் மகனே - நீயும் மாயவனார் தந்த பிச்சை இருளிக்கு ஓர் குழந்தை என் துரையே - நீயும் ஈஸ்வரனார் தந்த பிச்சை மான் கூட்டம் வருகுதடா தம்பியரே - நீரும் மறித்து விளையாடுதற்கு சிங்கக் கூட்டம் வருகுதடா தம்பியரே - நீரும் சேர்ந்து விளையாடுதற்கு மயிற்கூட்டம் வருகுதடா தம்பியரே - நீரும் மகிழ்ந்து விளையாடுதற்கு ஆராரோ ஆரிவரோ தம்பியரே - எந்தன் ஆரமுதே கண்வளராய் |
|
பொது வசனமும், பாட்டும்
(கங்கை வரும் காட்சியை பின்னணியில் வர்ணித்தல்) |
வசனம்:
|
இப்படியாக முத்துமாரி அம்மன் பிள்ளையை தொட்டிலிலே தாலாட்டிக் கொண்டிருக்கும் தருணம், அந்தத் தாலாட்டானது ஈரேழு உலகமும் அதிரும் படியாக எதிரொலிக்க இதனால் சினம் கொண்ட ஆதி பரமேஸ்வரனும், மஹா விஷ்ணுவும் அந்தத் தொட்டிலையும் பாலனையும் அழிப்பதற்காய் வாயு பகவானை ஏவிவிட, வாயு பகவான் முத்துமாரி அம்மனிடம் சாஸ்டாங்கம் செய்து திரும்பி விட, அக்கினி பகவானை ஏவிவிட, அக்கினி பகவானும் முத்துமாரி அம்மனிடம் சாஸ்டாங்கம் செய்து திரும்பி விட, அதிக சீற்றம் கொண்டு கங்கா தேவியானவள் தொட்டிலையும் பிள்ளையையும் அழித்து விட எப்படி வருகின்றாள் என்றாள்.....
|
பாட்டு:
|
அழிக்கிறன் பார் பிள்ளையை என்று - சொல்லி
அலை மோதி இரைந்து வருகிறதே கல்லோடு கல்லு மோதுப்பட்டு - கங்கை கடுங்கோபம் கொண்டு வருகுதன்றோ மண்ணதிரக் கங்கை விண்ணதிர - அந்த மலையதிர இங்கே வருகிறதே |
வசனம்:
|
இப்படியாகச் சீற்றம் கொண்டு, தொட்டிலையும் பிள்ளையையும் அழிக்க வரும் கங்கையை தொட்டிலிலே தூங்கிக் கொண்டிருக்கும் பாலகன் தனது திருவருட் சக்தியினால் எழுந்து என்னமாதிரி அந்தக் கங்கையை மறிக்கின்றான் என்றால்...
|
|
பால காத்தான் வரவு
|
பாலகாத்தான் பாடல்:
|
அஞ்ச வேண்டாம் அம்மா அஞ்ச வேண்டாம் - அந்த
ஆற்றையெல்லோ மகனார் நான் மறிப்பேன் கலங்க வேண்டாம் அம்மா கலங்க வேண்டாம் - அந்த கடலையெல்லோ மகனார் நான் மறிப்பேன் |
பாலகாத்தான் வசனம்:
|
அம்மா எதற்கும் கலங்காதீர்கள். இதோ கங்கையை மறித்து விடுகின்றேன்.
|
பாலகாத்தான் பாடல்:
|
ஓடிவந்த அந்த கங்கையைத்தான் - மகனார்
ஒற்றைக் காலாலே அம்மா நான் மறித்தேன் பாய்ந்து வந்த அந்த கங்கையைத்த்தான் - பாலன் பக்குவமாய்த் தாயே நான் மறித்தேன் ஆயனுடை நீயும் சொற்படிக்கோ - இங்கே அலை மோதிக் கங்கை வந்ததென்ன மாயனுடை நீயும் சொற்படிக்கோ - இங்கே மளமளென்று கங்கை வந்ததென்ன என் தகப்பன் அந்த ஆதி சிவன் - அதனால் என் சொல்லை நீயும் தட்டாதே சத்தியத்தை கங்கை கடவாதே - இந்தத் தரணியிலே நீயும் நில்லும் நில்லும் |
பாலகாத்தான் வசனம்:
|
அம்மா, எங்கள் இருவரையும் அழிக்க வந்த கங்கையை எனது தந்தை ஆதி சிவனின் நாமத்தைச் சொல்லித் தடுத்து விட்டேன் அம்மா, தடுத்துவிட்டேன்.
|
முத்துமாரியம்மன் வசனம்:
|
அப்படியா மகனே! மகனே, எங்கள் இருவரையும் அழிக்க வந்த கங்கையை மறித்து ஆபத்தைக் காத்தமையால் உனக்கு ஒரு விதமான பெயர் வைக்கப் போறேனடா.
|
பாலகாத்தான் வசனம்:
|
என்ன விதமான பெயரம்மா?
|
முத்துமாரியம்மன் பாடல்:
|
ஆபத்தைக் காத்தனீரே தம்பியரே - எந்தன்
அரும் பயத்தை தீர்த்தனீரோ ஆபத்துக் காத்தான் என்று என் துரையே - உனக்கு அரும் பெயரோ வைத்தேனடா |
முத்துமாரியம்மன் வசனம்:
|
சரி, மகனிடத்தில் சில மழலை மொழிகள் கேட்டுப் பார்ப்போம்.
|
|
தொடரும்...
|