
தொடர் – 20
சண்முகநாதன் கஜேந்திரன்
முத்துமாரியம்மன் பாடல்:
|
எழுதத் தெரியாவிட்டால் என்மகனே பாலா - அண்ணர்
எழுதிக் காட்டித் தருவாராடா கண்மணியே சீலா. |
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே காத்தவராயா! நீ ஒன்றிற்கும் பயப்படாது
மாமனார் பாடசாலை சென்று படித்துவாடா மகனே! |
காத்தவராயன் வசனம்:
|
அம்மா. அப்படியென்றால்
|
காத்தவராயன் பாடல்:
|
போற்றி வரங் கொடம்மா அம்மாவே - எனக்குப்
பொற் பிரம்பு கைக்கொடம்மா |
முத்துமாரியம்மன் பாடல்:
|
போற்றி வரமும் தந்தேன் என் துரையே - உனக்குப்
பொற்பிரம்பும் கையில் தந்தேனடா |
காத்தவராயன் பாடல்:
|
வாழ்த்தி வரங்கொடம்மா அம்மாவே - எனக்கு
வாளுருவிக் கைக்கொடம்மா |
முத்துமாரியம்மன் பாடல்:
|
வாழ்த்தி வரமும் தந்தேன் என் துரையே - உனக்கு
வாளுருவிக் கையில் தந்தேனடா |
முத்துமாரியம்மன் வசனம்:
|
மகனே சென்று வாடா
|
காத்தவராயன் வசனம்:
|
அம்மா சென்று வருகிறேன்
|
காத்தவராயன் வசனம்:
|
மாமனார் பாடசாலை சென்று படித்து வருவதாக இருந்தால், இந்த வேடத்துடன் செல்லக்கூடாது. ஆடை ஆபரணமணிந்து ஆயுததாரியாகத்தான் செல்ல வேண்டும்.
|
காத்தவராயன் பாடல்:
|
தூரத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கம் நானும் - ஒரு சுண்டு
வில்லுக் கைப்பிடித்தேன் மாரி பிள்ளை நானும் பக்கத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கம் நானும் - ஒரு பார வில்லுக் கைப்பிடித்தேன் மாரி பிள்ளை நானும் எட்டத்திலே வாறவர்க்கோ காத்தலிங்கம் நானும் - ஒரு ஈட்டி ஒன்று கைப்பிடித்தேன் மாரி பிள்ளை நானும் பாதிரி முல்லை வனம் காத்தலிங்கம் நானும் - நல்ல பரிய வனம் தான் கடந்தேன் மாரி பிள்ளை நானும் சில்லென்று பூத்ததொரு காத்தலிங்கம் நானும் - நல்ல செடியாய் வனம் கடந்தேன் மாரி பிள்ளை நானும் சிங்கம் உறங்கும் வனம் காத்தலிங்கம் நானும் - நல்ல சிறு குரங்கு தூங்கும் வனம் இப் பெரிய காடு அந்த வனம் கடந்தோ காத்தலிங்கம் நானும் - ஒரு அப்பால் வனம் தான் கடந்தேன் மாரி பிள்ளை நானும் ஏடு ஒரு கையில் கொண்டு காத்தலிங்கம் நானும் - எழுத எழுத்தாணி கைப்பிடித்தேன் சாமி துரை நானும் மாமனார் பள்ளிக்கூடம் காத்தலிங்கம் நானும் - மன மகிழ்ச்சியுடன் போய் வருவேன் சபையோரே கேளும் |
|
நடுக்காத்தான் / ஆதிக்காத்தான் வரவு
|
நடுக்காத்தான் பாடல்:
|
ஆதிசிவன் மைந்தனல்லோ - நானும்
ஆதிகாத்தான் ஓடி வாறேன் சபையோரே ஐயா பெரியோரே - நானும் ஆதிசிவன் மைந்தனல்லோ சோதி நிலை நின்றெறிக்க - நீயும் துணை செய்வாய் எந்தனுக்கு ஆதி சிவமே - பாலன் வந்தேன் சபைதனில் கற்ற பெரியோர்களிற்கும் - பாலன் காரணம் எடுத்துரைப்பேன் சபையோரே சபையின் பெரியோரே - நானும் வந்தேன் சபைதனிலே வித்துவான் சங்கீதமுண்டு இதில் - நல்லொரு வினோதமான இராகங்கள் உண்டு சப்த தாளமும் உண்டு - பாலன் வந்தேன் சபைதனிலே |
நடுக்காத்தான் வசனம்:
|
அந்த ஆதி பரமேஸ்வரன் தன் திருக்கரத்தில் ஏந்திய.
|
காத்தவராயன் பாடல்:
|
சிற்றுடுக்கை நாம் அடித்து - நல்ல
சிங்காரமானதொரு நடை நடந்து சிந்து நடை நடந்து - பாலன் வந்தேன் சபைதனிலே |
காத்தவராயன் வசனம்:
|
சபையோர்களே! நானும் என் தோழர்களும் இந் நாடகத்தில் அறியாது விடும் சொற் குற்றம், பொருட்குற்றம், அபிநயக் குற்றம், ஆடை ஆபரணக் குற்றம் எதுவாயிருப்பினும் உங்கள் பிள்ளைகள் ஒரு தவறைச் செய்தால் அதை எப்படி மன்னிப்பீர்களோ அதேபோன்று.
|
காத்தவராயன் பாடல்:
|
நாங்கள் அறியாமல் செய்யும் குற்றம்
நீங்கள் எல்லாம் பொறுத்திடுவீர் சபையோரே sஅபையின் பெரியோரே - பாலன் வந்தேன் சபைதனிலே |
|
தொடரும்.....
|