தொடர் 24
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
|
திரை - வனம்
|
|
வேடுவன் வரவு
|
வேடுவன் பாடல்:
|
வேட்டையிலே விருப்பம் கொண்டு
வில்லம்பு தான் கையில்க் கொண்டு காட்டினிலே வேட்டையாடக் கவண் வேடன் நானும் வந்தேன் |
வேடுவன் வசனம்:
|
நீண்ட நேரமாக அலைகின்றேன் மிருகங்கள் ஒன்றும் சிக்கவில்லை. சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். அதோ, வருகிறது கூட்டம்...
|
வேடுவன் பாடல்:
|
ஓடுது பார் வேகமதாய் ஒரு கணைக்ககப்பட மானினமே
பன்றிகள் பலபல குட்டியைக் கூட்டிக் கொண்டு (ஓடுது பார்.....] |
காத்தவராயன் வசனம்:
|
சின்னான் அதோ பார் ஓர் வேடுவன் ஓடி வருகின்றான். அவனுக்குப் பரீட்சயமான காடாகத்தான் இது இருக்கும். ஆதலால் அவனின் உதவியுடன் வேட்டையாடுவோம் வா.
|
சின்னான் வசனம்:
|
அப்படியே செய்வோம். வாருங்கள் அண்ணா. வேடுவனை அணுகுவோம்.
|
காத்தவராயன் வசனம்:
|
வேடுவனே, நீ இந்த வனத்திலே நீண்ட காலம் வேட்டையாடி வருபவன் போல் தெரிகிறதே?
|
வேடுவன் வசனம்:
|
ஆமாம் மகாராசா, என் வாழ்க்கையே இந்த வனந்தான்.
|
காத்தவராயன் வசனம்:
|
அப்படியென்றால் எங்களோடு சேர்ந்து வேட்டையாட முடியுமா?
|
வேடுவன் வசனம்:
|
தங்கள் உத்தரவு. அப்படியே செய்கிறேன் மகாராசா.
|
காத்தவராயன் வசனம்:
|
வேடுவனே அதோ பார் ஓர் மலை அங்கு சென்றால் என்ன வேட்டை ஆடலாம்?
|
வேடுவன் வசனம்:
|
ஐயா! அது உச்சமலை அங்கு போனால் உடும்பு வேட்டை ஆடலாம்.
|
சின்னான் வசனம்:
|
வேடுவனே இதோ தெரிகிறது ஓர் மலை இங்கு சென்றால் என்ன வேட்டையாடலாம்?
|
வேடுவன் வசனம்:
|
மகாராசா, இது பச்சை மலை இங்கு சென்றால் பன்றி வேட்டையாடலாம்.
|
காத்தவராயன் பாடல்:
|
உச்ச மலை மலைச் சாரலிலே காத்தான் நான் உடும்பு வேட்டை சுழன்று ஆடுறன் பார்
|
சின்னான் பாடல்:
|
பச்சை மலை மலை மீதேறி சின்னான் நான் பன்றி வேட்டை பதுங்கி ஆடுறன் பார்
|
வேடுவன் பாடல்:
|
கரிய மலை மலைச் சாரலிலே வேடன் நான் கரடி வேட்டை வேட்டை சுழன்றாடுறன் பார்
|
காத்தவராயன் பாடல்:
|
புல்லாங்கிரிச் சிகரம் மீதேறி காத்தான் நான் புலி வேட்டை ஒதுக்கி ஆடுறன் பார்
|
சின்னான் பாடல்:
|
குன்று குளம் சின்னான் ஏறி இறங்கி - இப்போ குருவி வேட்டை குறித்து ஆடுறன் பார்
|
வேடுவன் பாடல்:
|
வெள்ளி மலை மலை மீதேறி வேடன் நான் விருது வேட்டை விரும்பி ஆடுறன் பார்
|
காத்தவராயன் பாடல்:
|
மான் கூட்டம் மலைமேல் வருகுதல்லோ - இப்போ மறித்து வைத்தோ மடக்கி ஆடுறன் பார்
|
சின்னான் பாடல்:
|
சிங்கக் கூட்டம் அண்ணாவே வருகுதல்லோ சின்னான் நான் இங்கிதமாய் இருந்து ஆடுறன் பார்
|
காத்தவராயன் வசனம்:
|
நீண்ட நேரம் வேட்டையாடியதால் களைத்து விட்டோம்.
|
காத்தவராயன் பாடல்:
|
வேட்டையெல்லோ காத்தான் ஆடியதால் களைத்து வீற்றிருந்தேன் நடுக்கானகத்தே
|
சின்னான் பாடல்:
|
வேட்டையெல்லோ சின்னான் நானாடி வியர்த்து வீற்றிருந்தேன் நடுக்கானகத்தே
|
வேடுவன் பாடல்:
|
வேட்டையெல்லோ வேடன் ஆடியதால் அலுத்து வீற்றிருந்தேன் இந்தக் கானகத்தே
|
காத்தவராயன் வசனம்:
|
தம்பி, எனக்குத் தாகமாக இருக்கிறது. எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்து வருவாயா?
|
சின்னான் வசனம்:
|
இருங்களண்ணா, பார்த்து வருகிறேன் வேடுவனே இங்கே எங்காவது தண்ணீர் கிடைக்குமா?
|
வேடுவன் வசனம்:
|
ஐயா, அதோ ஓடுகிறது ஓர் அருவி அங்கே சென்று தாகம் தீர நீரருந்துங்கள்.
|
சின்னான் வசனம்:
|
சரி, வேடுவனே.
அண்ணா அதோ ஓடுகிறது ஓர் அருவி. அங்கே சென்று நீர் அருந்தலாம் வாருங்கள். |
காத்தவராயன் வசனம்:
|
அப்படியே ஆகட்டும் தம்பி.
(இருவரும் நீர் அருந்துதல்) |
|
தொடரும்....
|