==============================================
கச்சான் ,கச்சான் ,கச்சான்
கேட்கிறதா இந்தக்குரல்?
பெருஞ்சாலை பிதாவின் வரவேற்பு,
கண்டியானும் கால் நனைப்பான்,
கந்தபுரத்தானும் கற்பூரம் ஏத்துவான்.
மன்னனும் பணிந்தான் ,மக்களும் துதித்தார்,
நவீனும் வந்தான் ,ஜெயலத்தும் வந்தான். எத்தனை சுகம் எம்பிரான் வீதியில், கற்பூர ஜோதியும் ,சிதறு தேங்காயும் நித்தமும் கிடைக்கும் எம்பிரான் வாசலில். எத்தனை தலை முறை கண்டவா! இன்று எப்படி இருக்குது? AC பஸ் ,ஏலாத பஸ் ,தட்டி வான் ,மினி வான் , எத்தனை பயணிகள் எம்மவன் தெருவிலே! அக்கா வா, அண்ணா வா, ஜயா வா, அம்மா வா, ஆரவாரமான குரல் அறுசுவையான உண்டி. பொசிப்பான பீடா புளிப்பான கதைகள், போகும் இடத்திற்கு நாலு வடை. பொய்யில்லை இவையெல்லாம், பெருஞ்சாலை பிரான் சாட்சி. வந்தவனும் போய்விடுவான் இருப்பிடம், வரவேற்றவனும் வசதியாய் போய்விடுவான், ஜந்து கை ஜயா நீ மட்டும் இங்கே? ஒ ...இது தானே உன்னிடம். கோடி பணம் உள்ளவா! ஏன் இந்த குடிசை? மாடி வீடே கட்டலாமே? ஆடம்பரங்களை காணும் ஜயனே! உனக்கு அழகு இது தான். எங்களை அன்று காத்தாய்,இன்று காக்கிறாய், என்றும் காப்பாய். முறிகண்டி முதல்வா!திருமுறிகண்டி முதல்வா! கண்டி வீதியின் காவலா! நீரை விலக்கு விரைவாய் பால் கொண்டு அபிசேகிப்போம். மயிலைக்கவி சண் கஜா பதிவு: 01/05/2013 | |