"மயிலை மண்ணுக்கு ஒரு மடல்"
துன்பத்தில் ஒரு மடல்
சொந்த தேசத்தில் துவளும்
என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு
ஆருயிர் அன்னையே நீ
உன் அன்பு செல்வங்களை எண்ணி
அழுகிறாயா -இல்லை
உன் மழலைகளின் அன்பிற்கு
ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன்
என் அன்னையே
உன் மழலைகள்
இடம்பெயந்தோர் ......
அகதிகள் .........
என அடைப்பெயர்கள் கொண்டு
ஊர் ,உலகமெல்லாம் சுற்றுகிறோம்
நீயோ சொந்தமெதுவுமின்றி
நிர்கதியாக நிற்கிறாயே - என் அன்னையே
உனக்கு வாழ்த்து கூறவும் முடியவுமில்லை
இதுதான் முடிவுரை என உரைக்கவும் முடியவில்லை
என்றோ ஒரு நாள் உன்னிடம் வருவோம் அன்னையே
இது வெறும் வார்த்தைகள் அல்ல
என் சுவாச துடிப்புக்களே
நான் இறந்து போகமுன்
உன் அன்பு மடியில் தவள வேண்டும்
உன் இனிய நாதத்தினை கேட்டிட வேண்டும்
என் அன்பு முத்தத்தினை உன்னுடன் பகிர்ந்திடவேண்டும்
இது என் நெஞ்சில் எரிமலையாக வெடித்திடும்
ஓர் அன்பு தேடல்
நன்றி
மயிலை ச .சாந்தன்
துன்பத்தில் ஒரு மடல்
சொந்த தேசத்தில் துவளும்
என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு
ஆருயிர் அன்னையே நீ
உன் அன்பு செல்வங்களை எண்ணி
அழுகிறாயா -இல்லை
உன் மழலைகளின் அன்பிற்கு
ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன்
என் அன்னையே
உன் மழலைகள்
இடம்பெயந்தோர் ......
அகதிகள் .........
என அடைப்பெயர்கள் கொண்டு
ஊர் ,உலகமெல்லாம் சுற்றுகிறோம்
நீயோ சொந்தமெதுவுமின்றி
நிர்கதியாக நிற்கிறாயே - என் அன்னையே
உனக்கு வாழ்த்து கூறவும் முடியவுமில்லை
இதுதான் முடிவுரை என உரைக்கவும் முடியவில்லை
என்றோ ஒரு நாள் உன்னிடம் வருவோம் அன்னையே
இது வெறும் வார்த்தைகள் அல்ல
என் சுவாச துடிப்புக்களே
நான் இறந்து போகமுன்
உன் அன்பு மடியில் தவள வேண்டும்
உன் இனிய நாதத்தினை கேட்டிட வேண்டும்
என் அன்பு முத்தத்தினை உன்னுடன் பகிர்ந்திடவேண்டும்
இது என் நெஞ்சில் எரிமலையாக வெடித்திடும்
ஓர் அன்பு தேடல்
நன்றி
மயிலை ச .சாந்தன்