"அம்மாவிற்கு ஓர் கடிதம் "
அன்புள்ள அம்மா
நலமா ......?
உன் நினைவுகளின் ஸ்பரிசத்தோடு
நான் இங்கு நலமே !
உன் மனம் நோகடிப்பதோ
என் துன்பங்களை கொட்டுவதோ
நோக்கமல்ல இக்கடிதம்
என் ஆதங்கத்தை கொட்டுகின்றேன்
அன்புள்ள அம்மா
நலமா ......?
உன் நினைவுகளின் ஸ்பரிசத்தோடு
நான் இங்கு நலமே !
உன் மனம் நோகடிப்பதோ
என் துன்பங்களை கொட்டுவதோ
நோக்கமல்ல இக்கடிதம்
என் ஆதங்கத்தை கொட்டுகின்றேன்
உன் ஆயுளை கொடுத்து
என் ஆயுளை இரட்டிப்பாக்கியவளே
உன் ஆயுள் முடியும் காலத்தில்
நான் அருகில்யில்லையே
(என்ன தவம் செய்தேனோ அதற்கு நான் )
உன் விரல்கள் இன்று நடுங்குகையில்
அன்பு குரல் கொடுக்கவும்
ஆசையாக அரவணைக்கவும்
அன்பாக முத்தம் கொடுக்கவும்
என் மடியில் உன் தலை சாய்த்து
உன் தலை நான் கோதவும்
நான் அருகில்யில்லையே .....!
நான் உண்டமிச்சம் நீயுண்டு மகிழ்ந்த உனக்கு
கடைகாலத்தில் பாலூற்றவும் நானில்லை
வாய்க்கு அரிசி போடவும் அன்பாக வளர்த்த மகன்
நான் அருகில்யில்லை
பாரினில் உன்னை பரிதவிக்கவிட்ட பாவியாகவிடுவேனோயென்று
நான் தூரதேசத்தில் தூக்கமின்றி புலம்புகின்றேன்
கொள்ளி வைக்க நானுமில்லை
கொள்ளிபோட காசு கொடுக்க எவருமில்லை
என்னை சபித்துவிட உனக்கு மனசுமில்லை
என் கண்களும் சுடுகின்றது கண்ணீர்களால்
கைகளும் நடுங்குகின்றது உன் நினைவுகளால்
ஏற்றிவைத்த நெருப்புகுச்சிக்கு
நன்றி சொல்லி மெழுகுவர்த்தி உருகுவதுபோல
நானும் உன் நினைவுகளால் உருகுகின்றேன்னம்மா
எனக்கும் உனக்குமுள்ள பாசத்தினை நீயறிவாய் அம்மா
என் நிலைமையினையும் புரிந்து கொள்வாய் அம்மா
நாடோடி வாழ்க்கை எமக்கு புதிதல்லயம்மா
நாதியற்ற எமக்கு (தமிழர்க்கு )இது சாபக்கேடுயம்மா
இதையே சொல்லி தேற்றுகிறேன் என்மனசையம்மா
கடிதம் எழுதுகையிலும் கருணையுள்ள ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்
எனக்கும் கருணை காட்டிவிடு
கருணையுள்ள என்னம்மாவிற்கு
வாழ்வின் கடைக்காலத்தின் காரியங்களாவது
செய்துவிடவேண்டுமென்று
நம்பிக்கையே வாழ்க்கையம்மா
உன் உயிரும் என் மடியிலேயே பிரியும் அம்மா
உனக்கு பால்லூற்றவும் நான் வருவேன்
பால்பழமும் தந்து உன்னை காத்திடுவேன்
உன்முகம் பார்க்க நான் வருவேன் விரைவில்
அதுவரை நீ சுகமாக வாழ்ந்துவிடுயம்மா .......அம்மா .........
முற்றும்
நன்றி
மயிலை ச .சாந்தன்