"ஏங்குகின்றோம் "
கருவுற்ற மண்ணில்
மூவெட்டாண்டாக நாமில்லை
நீதியின் முன் கண்ணீர்ப்பூக்களாக
தவம் கிடக்கின்றோம்
நீதி தேவதையும் மலர்கின்றாள்யில்லை மீள்குடியேற
ஈரநெஞ்சு உள்ளம் எவரையும்
மூவெட்டாண்டாக காணவும்மில்லை
கருவுற்ற மண்ணில்
மூவெட்டாண்டாக நாமில்லை
நீதியின் முன் கண்ணீர்ப்பூக்களாக
தவம் கிடக்கின்றோம்
நீதி தேவதையும் மலர்கின்றாள்யில்லை மீள்குடியேற
ஈரநெஞ்சு உள்ளம் எவரையும்
மூவெட்டாண்டாக காணவும்மில்லை
தேனீக்கள் தேனமுதம் உண்ட மயிலை மண்ணில்
தென்னகத்து மாந்தர்கள் மகிழ்கின்றனர்
மண்ணுக்கு சொந்தகாரர்கள் நாம்
காடுமேடாகயலைகின்றோம்
எந்த மன்னனது நீதியிது ?
நிலைத்து நிற்குமோ இந்த அநீதி ................
பகலை எதிர்பார்த்து சூரியனும்
புகழை எதிர்பார்த்துசுயநலக்காரனும்
ஊதியத்தை எதிர்பார்த்து உழைப்பாளியும்
வார்த்தைகளை எதிர்பார்த்து கவிஞனும்
காதலை எதிர்பார்த்து காதலர்களும்
இரவை எதிர்பார்த்து சந்திரனும்
புன்னகையை எதிர்பார்த்து இதழ்களும்
இசையை எதிர்பார்த்து செவிகளும்
இரையை எதிர்பார்த்து விலங்குகளும்
கனவுகளுடன் காத்திருப்பதுபோல
சோதரர் மூவர் வழியில் வந்த நாமும்
மூதாயர் மண்ணில் மீள்குடியேற
சுற்றத்தாருடன் சூழ மயிலையில் வாழ ஏங்குகின்றோம்
மயிலை மண்ணின் சூழ்(ல் )தனில் கருவுற்ற நாம்
கருவையிழந்த தாய்போல மூவெட்டாண்டாக
கதறுகின்றோம் .......கண்ணீர்விடுகின்றோம் ........
நம் புண்ணிய பூமியில் புனிதர்களாக வாழ்ந்துவிட
நன்றி
மயிலை ச .சாந்தன்