கவிக்கு மறைவில்லை
புத்திசாலி பிரமனே ..............
அழகாய் படைத்தாய் பெண்ணை
இல்லை ....இல்லை ........இல்லை ......
என் காதலியை (யே )
என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில்
புத்திசாலி பிரமனே ..............
அழகாய் படைத்தாய் பெண்ணை
இல்லை ....இல்லை ........இல்லை ......
என் காதலியை (யே )
என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில்
நிலவு கூட கறை படிந்துள்ளது
உன்னழகை கொஞ்சம் கடனாக கொடு என்னவளே
அவளும் (நிலவு ) கொஞ்சம் அழகாக மலர்ந்திடட்டும்
இரவுகளை அழகாக்குவது நிலவு அல்ல
நிலவுக்கு அழகுதரும் உன் அழகே
என் காதுக்கு இனிமை தருவது இசையல்ல
உன் காதல் மொழியே
பூவை அழகாக பேசுவர் அனைவரும் ஆனால்
நான் தினமும் பேசுகிறேன்
பூக்களுக்கெல்லாம் அழகை கொடுக்கும் பூப்பெய்திய பாவையுடன்
என் காதலை அழகாக்குவது உன் அழகல்ல
கனிமை கலந்த உன் காதல்பேச்சு
இறைவனிடம் நான் கேட்கும் வரம் உன் அழகல்ல
உன் நிரந்தர கனிவு பேச்சே
என் நெஞ்சத்தில் உறைந்தது உதிரமல்ல
உந்தன் கவிபடிந்த உருவமே
நீ என்னை அறியவிரும்பினால்
என் எண்ணங்களை (கவி )திறந்து பார்
மூங்கில் குழலில் நுழையும் காற்றே தேன்னென்பர்
ஆனால் என் மூச்சுகாற்றில் கலந்த நீயே எனக்கு தேனமுதம்
எனக்கும் இறப்புண்டு (மறைவு )
ஆனால் உனக்காக மலர்ந்த என் கவிக்கு என்றும் மறைவில்லை
நன்றி
மயிலை ச .சாந்தன்