"பணம்"
ஓடுகின்றோம் ஓடுகின்றோம்
திக்குத் திசையின்றி ஓடுகின்றோம்
நிலையின்றி தடுமாறி தடுமாறி ஓடுகின்றோம்
பணம் எனும் உலகில்
பணம் தேடி ஓடுகின்றோம்
ஓடுகின்றோம் ஓடுகின்றோம்
திக்குத் திசையின்றி ஓடுகின்றோம்
நிலையின்றி தடுமாறி தடுமாறி ஓடுகின்றோம்
பணம் எனும் உலகில்
பணம் தேடி ஓடுகின்றோம்
அன்புதனை மறந்து
ஆசைகளை பெருக்கி
பாசம் தனை துறந்து
உடல்தனை வருத்தி
உறவுகளை மறந்து
பணம் தனை பெருக்கிட ஓடுகின்றோம்
உறவுகள் தேடி அரவணைத்த நாம்
உலகின் திசையெங்கும் திக்கற்று உருளுகின்றோம்
உரிமையில்லா (நிலையில்லா) பணம் தனை
உரிமையுடன் கொண்டாட ஓடுகின்றோம்
பணம் படைத்தவன் பணக்காரன்
பணமில்லாதவன் பிச்சைக்காரன்
என நிலையில்லா பெயர்களைச் சூட்டி
நிலையில்லா உலகில் போட்டியிட ஓடுகின்றோம்
உரிமையுடன் அழைத்து உறவாடிய உறவுகள்
உரிமையில்லா பணத்தின் மோகத்திணால்
உரிமயில்லா உறவுகளை விருந்தோம்புகின்றது
உரிமையுள்ள உறவுகளை உருத்துடன் உறவாட மறுக்கின்றது!
மயிலை சாந்தன்
பதிவு: 23/02/2013