ஏர் பூட்டி
வயல் உழுது
வரம்பமைத்து
வாய்க்காலில் நீர்பாய்ச்சி
நாற்று நட்டு
களை கழைந்து
முற்றிய கதிர் நிலம்சாய
அறுவடை செய்து
புது நெல்லெடுத்து
வீட்டு முற்றத்தில்
மாவிலை தோரணம் கட்டி
வர்ணஜால கோலம்மிட்டு
புத்தாடை உடுத்தி
புதுப்பானையில் பொங்கலிட்டு
பலவகை இனிப்புப் பண்டங்களுடன்
கரும்பும் சேர்த்து
கதிரவனுக்கு நன்றிகூற
படையலிட்டு பார் எங்கும்
கொண்டாடும் திருநாளாம்
தமிழர் தைத்திருநாளாம் பொங்கலோ .....பொங்கல்
நன்றி
மயிலை ச .சாந்தன்
வயல் உழுது
வரம்பமைத்து
வாய்க்காலில் நீர்பாய்ச்சி
நாற்று நட்டு
களை கழைந்து
முற்றிய கதிர் நிலம்சாய
அறுவடை செய்து
புது நெல்லெடுத்து
வீட்டு முற்றத்தில்
மாவிலை தோரணம் கட்டி
வர்ணஜால கோலம்மிட்டு
புத்தாடை உடுத்தி
புதுப்பானையில் பொங்கலிட்டு
பலவகை இனிப்புப் பண்டங்களுடன்
கரும்பும் சேர்த்து
கதிரவனுக்கு நன்றிகூற
படையலிட்டு பார் எங்கும்
கொண்டாடும் திருநாளாம்
தமிழர் தைத்திருநாளாம் பொங்கலோ .....பொங்கல்
நன்றி
மயிலை ச .சாந்தன்