"ரிசானா"
நீதியில்லா மண்ணில் விழுந்த தேவதையே
உன் மரணத்தின் கொடூரம் என்ன
உன் பசுங்குடில் வருமை போக்க
செல்வந்த நாடு சென்றாயோ?
நீதி செழிப்பற்ற நாட்டில்
உனக்கு நீதியில்லாமல் நடந்த கொடூரம் என்ன
நீதியில்லா மண்ணில் விழுந்த தேவதையே
உன் மரணத்தின் கொடூரம் என்ன
உன் பசுங்குடில் வருமை போக்க
செல்வந்த நாடு சென்றாயோ?
நீதி செழிப்பற்ற நாட்டில்
உனக்கு நீதியில்லாமல் நடந்த கொடூரம் என்ன
உன்னைப் போன்று படர்ந்த முட்களிடை படுத்துறங்கும்
உயிர்கள்தான் எத்தனைபேர் அங்கு...
அல்லா காலடி சென்ற ரிசானாவே
உன் உம்மா வாப்பா மனநிலையறிவாயோ?
மரண வாசல் சென்றுவந்த நாம்
மரணத்தின் வேதனையறிவோம்
நிஜங்களோடு சலனப்பட்ட உன் வாழ்க்கை
இறுதி நிமிடம் வரை கண்மூடிய நீதி தேவதையால்
வேதனையாகவே கரைந்ததே
உம்மா கையால் சோறு உண்ண ஆசைப்பட்டவளே
சோதனையோடே உன் வாழ்க்கை முடிந்துவிட்டதே!
மயிலை ச.சாந்தன்
பதிவு: 02/02/2013