நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"தூரதேசம்"

8/6/2013

0 Comments

 
"தூரதேசம்"

தூரதேச கனவுகளில் தொலைந்து போனவர்கள் அல்ல நாம் 
துயரம் போக்க தூக்கம் தொலைத்தவர்கள் நாம் 
அலாரமணிகளில் எழுந்தவர்கள் அல்ல நாம் 
சூரியனின் அரவணைப்பில் விழித்தவர்கள் நாம் 
கல்வியே மூலதனமென கற்றவர்கள் நாம் 
பரதேசியாக நம் உயிர்காக்க கடல் கடந்தவர்கள் நாம் 
இரவல் தேசத்து இருப்பிட அனுமதிபெற 
வரிசையில் ஆடு மாடு போல கிடந்தவர்கள் நாம் 

குசலம் விசாரிப்பதக்கு கண்ணீரையே 
எங்களின் உயிர்தோழனாக ஏற்றவர்கள் நாம் 
உறவுகளின் பிரிவுகளில் எம் மனங்களை 
சாகடித்து வாழுபவர்கள் நாம் 
பெற்றவர்களின் மனம் நோகடிக்காமல் 
எம் தலையணைகளை நணைப்பவர்கள் நாம் 

நாம் பணம் தேடும் ஏழைகள் அல்ல 
பாசம் தேடும் பணக்கார உறவுகள் நாம் 
எம் தேகத்தில் வீசும் வாசனை
வாசனைத் திரவியமாக இருக்கலாம் 
நாம் தேடிய பணத்தில் கண்ணீரின் உப்புக்களே அதிகம் 

கூடிய உறவுகளை பிரிந்து 
சொர்க்கமே என்று இருந்த சொந்தத்தை இழந்து 
மூலதனமே என்று இருந்த கல்வியை இழந்து 
கண்ணீரே எமது சொந்தமென தூரதேசம்வந்த உறவுகள் நாம் 
மொழிதெரியா தேசத்தில் வாழ்ந்திடதுடிக்கும் 
வாழ்விடம் இழந்த பாவிகள் நாம் 
வந்தேறிடத்திலும் உயர்ந்திடத் துடிக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் நாம் 

இன்பக் கனவுகளில்   கடல் கடந்தவர்கள் அல்ல நாம் 
துன்ப நினைவுகளை சுமந்து தூரதேசம் வந்தவர்கள் நாம் 
பணப்பொதிகளை சுமக்கும் கழுதைகள் அல்ல நாம் 
கனத்த இதயங்களை சுமக்கும் உங்கள் சொந்தக்காரர்கள் நாம் 
நன்றி !

"மயிலை ச.சாந்தன்" 

பதிவு : 08/06/2013
0 Comments



Leave a Reply.

    மயிலை ச. சாந்தன்

    ச. சதானந்தன் 
    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2019
    August 2014
    June 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    November 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    December 2012
    November 2012
    September 2012
    May 2012
    April 2012

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com