காலனவனின் கொடூரமா
கயவனவனின் கொண்டாட்டமா
கலியுகத்தின் திண்டாட்டமா
கைகூப்பும் ஆண்டவனின் கண்ணாமூச்சியாட்டமா
கயவனவனின் கொண்டாட்டமா
கலியுகத்தின் திண்டாட்டமா
கைகூப்பும் ஆண்டவனின் கண்ணாமூச்சியாட்டமா
அலை அலையென பொங்கியெழுந்த கொடூரனவன்
இரக்கமில்லா இறைவனனுப்பிய சுனாமியவன்
புன்னகை பூத்த மழலைகளை அள்ளியணைத்த காலனவன்
தாய் தந்தை சகோதரர்களை சுருட்டியெடுத்த கொடூரனவன்
காலமும் கண்ணீர் வடிக்கவைத்த அசுரனவன்
மரண தண்டனை கொடுப்பதற்கு
மாண்டவர்கள் என்ன குற்றவாளிகளா ?
கொடூரம் செய்த கொடுங்கோல் ஆட்சி செய்தவர்களா ?
காமப்பசிக்கு மாண்டவர்களையும்
புசித்த புத்தி பேதலித்தவர்களா ?
பேரன்பு கொண்ட போதிமர உறவுகளை
பேரிரைச்சலோடு காவு கொண்ட சுனாமியே !
அடிநெஞ்சில் னெருடவேயில்லையா உனக்கு
உன் கொடூரப் பசிக்கு எமது உறவுகளையா காவுகொண்டாய் !
பொங்கியெழுந்த கடல்நீரில்
மூழ்கியது எங்கள் உறவு
எங்கள் கண்ணில் பொங்கியெழுந்த கண்ணீரில்
மூழ்கியது சுனாமி கொடூரனவன்
வேண்டவே வேண்டாம் இன்னொரு "சுனாமி" அகவை !
மயிலை ச. சாந்தன்
பதிவு: 23/12/12
இரக்கமில்லா இறைவனனுப்பிய சுனாமியவன்
புன்னகை பூத்த மழலைகளை அள்ளியணைத்த காலனவன்
தாய் தந்தை சகோதரர்களை சுருட்டியெடுத்த கொடூரனவன்
காலமும் கண்ணீர் வடிக்கவைத்த அசுரனவன்
மரண தண்டனை கொடுப்பதற்கு
மாண்டவர்கள் என்ன குற்றவாளிகளா ?
கொடூரம் செய்த கொடுங்கோல் ஆட்சி செய்தவர்களா ?
காமப்பசிக்கு மாண்டவர்களையும்
புசித்த புத்தி பேதலித்தவர்களா ?
பேரன்பு கொண்ட போதிமர உறவுகளை
பேரிரைச்சலோடு காவு கொண்ட சுனாமியே !
அடிநெஞ்சில் னெருடவேயில்லையா உனக்கு
உன் கொடூரப் பசிக்கு எமது உறவுகளையா காவுகொண்டாய் !
பொங்கியெழுந்த கடல்நீரில்
மூழ்கியது எங்கள் உறவு
எங்கள் கண்ணில் பொங்கியெழுந்த கண்ணீரில்
மூழ்கியது சுனாமி கொடூரனவன்
வேண்டவே வேண்டாம் இன்னொரு "சுனாமி" அகவை !
மயிலை ச. சாந்தன்
பதிவு: 23/12/12