சுனாமி நினைவுகளில் ஆண்டு ஒன்பது
அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும்
ஆறவில்லை எம்மனசு
அன்னை மடியே தஞ்சமெனயிருந்த எம்மை
வெஞ்சினம் கொண்டு அள்ளிவாரிகொண்ட
நீலக்கடலே ஆண்டுஒன்பதானாலும்
ஆறவில்லை எம்மனசு
உன்னை அண்டிவாழ்ந்தோரை
வளமுடனே வாழவைத்தாய்
வாழ்வளிக்கும் ஆண்டவனாக உன்னை
வாயார புகழ்ந்து கொண்டோம்
பொங்கியெழுந்து எம்வெள்ளை மணலையும்
கரிமணளாக்கியது ஏன் ?
மாலையில் மேலெழும் மதி பெண்ணவளுக்கு
ஓரக்கண்கொண்டு பார்த்து வழிவிட்டு மறையும்
சூரியனை காணவருவோர்க்கு
கண்கொள்ளா காட்சியினை அளித்த கடல் அன்னையே
வெறிகொண்டு ஆடியது ஏன் ?
சிறுமீனும் ,பெருமீனும் உன்மடியில்
பிடித்து வாழ்ந்த மாந்தர்களை
வாழ்ந்தது போதும் வா....என்னிடம் என்று
கடலடியில் அமுக்கி சென்றதேன் ?
அன்னையின் அரவணைப்பில் சிரித்து விளையாடியது போல்
நீ தாலாட்டும் கடல் அலையுடன் விளையாடிய
மழலைகளை வயிறுபொருமவைத்து கொன்றதேன் ?
புகுந்தவீட்டு அன்னைபோல் உன்னை அரவணைத்த
எம் அன்னையரை காவுகொண்டதேன் ?
பெற்ற அன்னைபோல் உன்மடியில் வளர்ந்த எம்
தந்தையர்களை தரணியில்ய இல்லாமல்லாக்கியதேன் ?
கொந்தளிக்கும் கடல் அலையிலும்
குமரிப்பெண்களிடம் குசும்புகாட்டுவதுபோல்
துள்ளித்திரிந்த நம் விடலைபருவங்களை
மண்ணோடுமண்ணாக்கியதேன் ?
கடல்யன்னையின் கதைகள் பலகூறிய
எம் பாட்டன் ,பாட்டிகளை
பரிதாபமாக சாவடித்ததேன் ?
கடலம்மா ......
பொங்கியெழுந்தது போதும்அம்மா
சாவடித்தவர்களை சாந்தியடையசெய்யம்மா
உன் சந்ததிகள் வாழ வழிசெய்யம்மா
போதுமே போதுமே உந்தன் கணக்கு .
நன்றி
மயிலை ச .சாந்தன்
வளமுடனே வாழவைத்தாய்
வாழ்வளிக்கும் ஆண்டவனாக உன்னை
வாயார புகழ்ந்து கொண்டோம்
பொங்கியெழுந்து எம்வெள்ளை மணலையும்
கரிமணளாக்கியது ஏன் ?
மாலையில் மேலெழும் மதி பெண்ணவளுக்கு
ஓரக்கண்கொண்டு பார்த்து வழிவிட்டு மறையும்
சூரியனை காணவருவோர்க்கு
கண்கொள்ளா காட்சியினை அளித்த கடல் அன்னையே
வெறிகொண்டு ஆடியது ஏன் ?
சிறுமீனும் ,பெருமீனும் உன்மடியில்
பிடித்து வாழ்ந்த மாந்தர்களை
வாழ்ந்தது போதும் வா....என்னிடம் என்று
கடலடியில் அமுக்கி சென்றதேன் ?
அன்னையின் அரவணைப்பில் சிரித்து விளையாடியது போல்
நீ தாலாட்டும் கடல் அலையுடன் விளையாடிய
மழலைகளை வயிறுபொருமவைத்து கொன்றதேன் ?
புகுந்தவீட்டு அன்னைபோல் உன்னை அரவணைத்த
எம் அன்னையரை காவுகொண்டதேன் ?
பெற்ற அன்னைபோல் உன்மடியில் வளர்ந்த எம்
தந்தையர்களை தரணியில்ய இல்லாமல்லாக்கியதேன் ?
கொந்தளிக்கும் கடல் அலையிலும்
குமரிப்பெண்களிடம் குசும்புகாட்டுவதுபோல்
துள்ளித்திரிந்த நம் விடலைபருவங்களை
மண்ணோடுமண்ணாக்கியதேன் ?
கடல்யன்னையின் கதைகள் பலகூறிய
எம் பாட்டன் ,பாட்டிகளை
பரிதாபமாக சாவடித்ததேன் ?
கடலம்மா ......
பொங்கியெழுந்தது போதும்அம்மா
சாவடித்தவர்களை சாந்தியடையசெய்யம்மா
உன் சந்ததிகள் வாழ வழிசெய்யம்மா
போதுமே போதுமே உந்தன் கணக்கு .
நன்றி
மயிலை ச .சாந்தன்