பிறப்பிலும் இறப்பிலும் உரிமையுடன் வருவது உறவுகள்!
பசும்பால் போல் வெள்ளை மனதுடன் வருவது உறவுகள்!
உயர்விலும் ஒளிபோன்று கூட இருப்பது உறவுகள்!
தாழ்விலும் உரிமையுடன் கூட இருப்பது உறவுகள்!
பசும்பால் போல் வெள்ளை மனதுடன் வருவது உறவுகள்!
உயர்விலும் ஒளிபோன்று கூட இருப்பது உறவுகள்!
தாழ்விலும் உரிமையுடன் கூட இருப்பது உறவுகள்!
உச்சிமலர்ந்து நல் மனதுடன் ஆசீர்வதிப்பதும் உறவுகள்!
தேடிப்பெற்றதல்ல உறவுகள்!
ஆண்டவன் படைப்பில் கிடைத்தது உறவுகள்!
புகழின் உச்சத்தில் கூட இருப்பதும் உறவுகள்!
துக்கத்திலும் கைவிடாமல் அரவணைப்பதும் உறவுகள்!
வக்கிரம் இல்லாமல் பார்ப்பதும் உறவுகள்!
வஞ்சனை இல்லாமல் பேசுவதும் உறவுகள்!
வாடாமலராக மலர்வதும் உறவுகள்
உள்ளம் மலர்ந்து உணர்வோடு கூடுவதும் உறவுகள்!
மயிலை ச. சாந்தன்
பதிவு: 02/12/12