"வெடிகுண்டு"
உன் பெயர் உச்சரிக்கவே அச்சம்
எச்சரிக்கை எச்சரிக்கையே உன் தோற்றம்
புன்னகைகளை பறிக்கும் கொடூரன் நீ
இரத்தவாசனை முகரும் இரத்தக்காட்டேறி நீ
காதலில் வாழும் மனிதர்களை
இரக்கமின்றி கொலைசெய்யும் கொலைகாரன் நீ
உன் பெயர் உச்சரிக்கவே அச்சம்
எச்சரிக்கை எச்சரிக்கையே உன் தோற்றம்
புன்னகைகளை பறிக்கும் கொடூரன் நீ
இரத்தவாசனை முகரும் இரத்தக்காட்டேறி நீ
காதலில் வாழும் மனிதர்களை
இரக்கமின்றி கொலைசெய்யும் கொலைகாரன் நீ
பூமாலை அணிவிக்க நீயொரு உத்தமன் அல்ல
மரணமாலை அணிவிக்க பிறப்பெடுத்த அக்கிரமகாரன் நீ
உனக்கேது வாழ்க்கை?
உன்னை பெற்றெடுத்தவர் யாரெவர்?
அவர்களுக்கு உயிர்களின் பெறுமதி அறியுமோ?
உன் வெடிப்பு சிதறல்களில் சிதறிய பிணப்பிண்டங்களை கேட்டுப்பார்
உன் கொடூரங்களின் கோரக்கதை கூறும்
அவயங்களை இழந்தவர்களிடம் கேட்டுப்பார்
துன்பங்களின் சிகரம் புரியும் உனக்கு
இல்லையேல் ...................
அவர்களோடு வாழ்ந்து பார்
உன் வாழ்க்கையின் கொடூரமுகம் உனக்கே தெரியும்
இரக்கமுள்ள ஆண்டவனிடம் வரமொன்று கேட்கின்றேன் நான்
வெடிகுண்டே உனக்கும் ஒருமுறை இறப்பு வேண்டுமென்று.
"மயிலை ச.சாந்தன் "
பதிவு: 28/04/2013