- இப்படி வடக்குப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தம்மை நேரில் அழைத்துத் தெரிவித்துவிட்டார் என வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.
“வலி. வடக்கில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றுவது தொடர்பில் அண்மைக் காலத்தில் படைத் தரப்புடன் நாங்கள் ஆறு சுற்றுப் பேச்சு நடத்தினோம். இடம்பெயர்ந்தோரின் புள்ளிவிவரங்களை எல்லாம் கஷ்டப்பட்டு சேகரித்து வழங்கினோம். ஆனால் பயன் ஏதும் கிட்டவில்லை.
மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்தோரும் ஏனையோரும் வளலாய் காணிகளில் மீள்குடியேலாம் என்று நேற்று முன்தினம் என்னை அழைத்து யாழ். கட்டளைத் தளபதி நேரில் தெரிவித்தார்.
அப்படி வளலாயில் போய்க் குடியேற விரும்புபவர்களை குடியேற்றுங்கள் என்றேன். எனினும் கடற்றொழில் செய்பவர்கள் – மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் – கடலுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்க வேண்டும். அப்படிக் குடியிருந்தால்தான் தொழில் செய்ய முடியும்.
வளலாயில் குடியிருந்து கொண்டு மயிலிட்டியில் போய் தொழில் செய்வது சாத்தியப்படாது என்பதை நேரடியாக அவருக்குத் தெரிவித்துவிட்டேன் – இவ்வாறு குணபாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.
நன்றி: ஈழதேசம்.கொம்