வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த நிலத்தில் தாம் உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.இப் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், பூந்தளில் பெண்கள் அமைப்பு, பிரஜா அபிலாஷை வலையமைப்பு போன்ற அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவு வழங்கியுள்ளன.
0 Comments
காணி உறுதி, வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலய முள்வேலிகளை தாண்டுவோம் என்று இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வலி வடக்கு மக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் சந்திப்பு - லங்காசிறி4/10/2015
வலி வடக்கு மக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் சந்திப்பு வீடியோ இணைப்பு - லங்காசிறி.
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் யாழ்.தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் யாழ்.வலி. கிழக்கு வளலாய் பகுதிக்கு விஜயம் செய்து மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மயிலிட்டித்துறைமுகத்தை வளலாயில் அமைப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, மீனவ சங்கங்கள், மீள்குடியேற்ற குழு என்பன கூட்டாக இணைந்து நிராகரித்துள்ளன. மயிலிட்டித் துறைமுகத்தை வேறு எந்தவொரு இடத்துக்கும் மாற்ற வேண்டாம். வடக்கு மாகாணத்துக்கே பொதுவான துறைமுகம் மயிலிட்டி தான் என்று தெரிவித்து மீனவ சங்கங்கள் எழுத்து மூலமான பதிலை வழங்கியுள்ளன.
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|