
![]()
ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 21/08/2017 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குத்தந்தையின் உதவி குருவானவரால் அத்திபாரக்கல் ஆசீர்வதிக்கப்பட்டு குருவானவராலும் மற்றும் திரு.அ.குணபாலசிங்கம், திரு.கீதபொன்கலன், கிராமசேவகர், வலி.வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திரு.எஸ்.சுகிர்தன் மற்றும் ஊறணி மக்களாலும் மிகவும் மனப்பூர்வமாக நாட்டப் பட்டது.
![]()
பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியை மீனவர்களின் நன்மை கருதி உடனடியாக திறப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மாவட்ட அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அதிபர் மேலும் தெரிவிக்கையில், மயிலிட்டிப் பகுதியின் முக்கிய இடமாகத் திகழும் துறைமுகம் விடுவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொழில் புரியும் மீனவர்கள் பருத்தித்துறையில் இருந்து வந்து போவதற்கான ஒரே மார்க்கமாகத் திகழும் பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியை படையினர் இதுவரைக்கும் விடுவிக்கவில்லை. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
ALL
Archives
March 2025
|