
![]()
ராகம நிறுவனத்தின் திட்டத்தில் முடிக்கப்பட்ட மலசல கூடம் மற்றும் கிணறுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு தையிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மயிலிட்டித்துறை, தையிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு பகுதி பயனாளிகள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் நோர்வே உதவித் தூதர் மற்றும் UNDP பிரதிநிதிகள் வருகை.24/2/2018 ![]()
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய பகுதியில் கடல் ஆழப்படுத்தல் செயல்பாடுகளை முன்னிட்டு 16/02/2018 இன்றைய தினம் தெல்லிப்பளை பிரதேச செயலக ஏற்பாட்டில் மயிலிட்டி மக்கள் மற்றும் கிராமம் சார்ந்த அமைப்புக்களின் ஒத்துழைப்புப்புடன் விடுவிக்கப்பட்ட பகுதியின் 1.8 km கரையோர பகுதி சுத்தப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் இவ் நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் அனர்த்த முகாமத்துவ பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் பிரதே சபை குப்பை அகற்றும் வாகன உதவியுடன் அப் பிரதேசத்தை விட்டு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]() மகிழ்ச்சி வெள்ளத்தில் மயிலிட்டி மக்கள் மயிலிட்டி ஊடான கடற்கரை பாதை திறப்பு 28 வருடங்களின் பின் பொன்னாலை பருத்தித்துறை கடற்கரை வீதி இன்று 06/02/2018 காலை 8.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது எவ்வளவோ போராட்டங்கள், காத்திருப்புக்கள், தவிப்புக்கள், அலைச்சல்கள் என இன்னும்பல துயர்களைக் கடந்து விடுவிக்கப்பட்டது. விடுதலை பெற்றது மயிலிட்டி வீதி என்றுதான் சொல்லவேண்டும். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
ALL
Archives
March 2025
|