0 Comments
சொந்த வாழ்விடங்களை மீட்காமல் ஓயமாட்டோம்; உணவுத் தவிர்ப்பில் ஈடுபடும் வலி. வடக்கு மக்கள் சபதம15/11/2013 "எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்'' இவ்வாறு அறைகூவல் விடுத்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம். வலி. வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளையும் விடுவிக்குமாறு கோரி வலி. வடக்கு மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது. 1990ஆம் ஆண்டில் இருந்து உயர்பாதுகாப்பு வலையம் என இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் மாவட்டபுரம் கந்தன் ஆலய முன்றலில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் , சித்தார்த்தன் , ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர். நன்றி: உதயன். கொம் சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. தமது வீடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துமாறும் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் வலியுறுத்தி இந்த மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் . யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது . வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவான், எஸ். சிறிதரன், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.க. சிவஞானம், கல்வி அமைச்சர் பி. குருகுலராசா மற்றும் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், க. பரஞ்சோதி மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். வலி.வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடழிப்புநடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரியும், அந்தப் பகுதிகளை மக்கள் குடியமர்வுக்கு விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்க வலி.வடக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தப் போராட்டம் வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெறும் என்று வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|