முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது.
முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
0 Comments
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் மயிலிட்டி துறைமுகப் பகுதியை மக்களிடம் மீள வழங்குவதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்ததாக வெளியான செய்திகள் தவறானவை என பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான தீர்மானத்தை பிரதமர் எடுக்கவில்லை. மேலும் அவ்வாறான வார்த்தை பிரயோகத்தையும் பிரதமர் செய்யவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மயிலிட்டி மண்ணில் தைப்பூசத் திருவிழா
24.01.2016 பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் எமது மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி ஆலயத்திலும் முருகமூர;த்தி ஆலயத்திலும் எதிர்வரும் 24.01.2016 ஞாயிற்றுகிழமை இவ்வருட தைப்பூச திருவிழாவை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு இராணுவதினர் அனுமதியளித்துள்ளனர். அத்தினம் சகல அடியார்களும் ஆலயங்களுக்கு வருகை தந்து தெய்வங்களின் அனுக்கிரகங்களை பெற்றுய்யுமாறு அன்புடன்; அழைக்கிறோம். சகல அடியார்களுக்கும் சகல ஒழுங்குகளும் வெகு சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையிலிருந்து போக்குவரத்து வசதிகள் (இலவசமாக) ஒழுங்கு செய்யப்ப்டுள்ளது. வழமை போலவே சகல அடியார;களும் அத்தினம் காலை 7 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலடிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு:- புகைப்படக் கருவிகள், கைத்தொலைபேசிகள் உட்கொண்டு செல்லத் தடை. தொடர;புகளுக்கு:- 0789143019 0775034770 0771727818; தகவல்: முத்துசாமி கருணாகரன்
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.
பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை சிறிலங்கா படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். மயிலிட்டித் துறைமுக விடுவிப்புக் குறித்து பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும்-அமைச்சர்16/1/2016
மயிலிட்டித் துறைமுக விடுவிப்புக் குறித்து பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும். ஜனாதிபதியுடன் பேசுவேன் என்கிறார் கடற்றொழில் அமைச்சர்.
வலி. வடக்கு மயிலிட்டித் துறைமுகம் கடற்படையினரின் கட்டுப் பாட்டில் இருப்பதால் இதனை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் இந்தத் துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் கையளிக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
வலி. வடக்கில் விடுவித்ததில் தோட்டக் காணிகளே அதிகம்! வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் சுட்டிக்காட்டு.
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் பெரும்பாலானவை தோட்ட நிலங்கள். குடியிருப்பு நிலமாகிய பலாலி வடக்குப் பிரதேசமானது மக்கள் செல்ல முடியாத அளவுக்கு காடாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறு வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|