மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் 3ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலைய கட்டடத்திறப்பு விழா கடந்த 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
0 Comments
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பாடசாலையினை துப்பரவு செய்து தருமாறு திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திடம் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2021.01.10) அவ் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ் சிரமதானப்பணியில் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இணைந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் புலமைப்பரிசில் பரீட்சையில18/11/2020 மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.29/12/2018
கல்வி செயற்பாட்டை மயிலிட்டி மண்ணில் முன்னெடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 10/12/2018 அன்று நடைபெற்றது.
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் முன்னெடுப்பில் நமது புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் இக்கல்வி நிலைய கட்டுமானப் பணிகள் இனிதே இன்று ஆரம்பிக்கப்பட்டது.
செல்வச் செழிப்புடன் சீரும் சிறப்புமாக வளம் கொழித்து வனப்புடன் திகழ்ந்திருந்த எமது மயிலிட்டி மண் இன்று முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துரிதகதியில் எமது மண்ணை அபிவிருத்தி செய்து எமது மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பாரிய பணி எம்முன் உள்ளது. அதனை செவ்வனே ஆற்றிடும் வகையில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியத்தை கட்டமைக்கும் ஒன்றுகூடல் இன்று நடைபெற்றுள்ளது.
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|