[ திங்கட்கிழமை, 11 யூன் 2012, 01:45.43 PM GMT ]
அரசு மீள் குடியமர்விற்கு எம்மை உடன் அனுமதிக்காவிட்டாலும் எமது சொந்த இடங்களுக்கு சென்று தொழில் புரிவதற்காவது அனுமதிக்க வேண்டும் என மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீனவ சங்க தலைவரும் வலிகாமம் வடக்கு கடற்றொழிலாளர் சமாச பிரமுகருமான வி.யோகராசா தெரிவித்துள்ளார்.வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு வழங்ககப்பட்டு வந்த நிவாரணம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தொழிலும் இன்றி நிவாரணமும் இன்றி தமது பகுதி கடற்றொழிலாளர்கள், வாழ்வாதார உதவிகள் இன்றி இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.