வலி.வடக்கு மீள்குடியமர்வு இராணுவத்தினர் கைகளிலேயே! என்னால் எதுவும் செய்ய முடியாது: இமெல்டா க5/4/2012 வலிகாமம் வடக்கு பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் மக்கள் இப்பகுதியில் குடியமர பாதுகாப்பு தரப்பினரே தனக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.வலிகாமம் வடக்கு, ஊரணி, மயிலிட்டி வடக்கு, பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.அரச அதிபருக்கு தம்மை விடுவிக்குமாறு கோரி மகஜர் ஒன்றை கையளிளத்திருந்தனர்.
0 Comments
யாழ்ப்பாணம் வலி.வடக்கை விடுக்க கோரி போராட்டம் நடாத்தும் முயற்சியில் அப்பகுதி மக்கள் [ புதன்கிழமை, 04 ஏப்ரல் 2012, 03:11.52 AM GMT ] இராணுவத்தினர் வசமுள்ள வலிகாமம் வடக்கு பகுதியை விடுவிக்கக் கோரி அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவதற்கு தயாராகி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.பலாலி, மயிலிட்டி, ஊரணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பேராட்டத்திற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் மீள்குடியேற்றப்படாத பகுதியில் விரைந்து குடியேற்ற கோரிக்கை வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு, பலாலி வடமேற்கு ஆகிய பகுதிகளில் விரைந்து மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு யாழ். மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமாரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை, மீள்குடியேற்றக் குழுத் தலைவர் அ.தனபாலசிங்கம் தலைமையில் குறித்த மனு மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துமாறு யாழ்.அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு[ ச3/4/2012 வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துமாறு யாழ்.அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு [ செவ்வாய்க்கிழமை, 03 ஏப்ரல் 2012, 07:18.36 AM GMT ] வலிகாமம் வடக்கு, காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு போன்ற பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவினர், யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளனர்.22 வருடங்களுக்கு மேலாக சொந்த ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து, பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தற்போது நாட்டில் போர் முடிந்து மூன்று வருடங்கள் நெருங்கிக் கொண்டிக்கும் அந்த நேரத்தில், எமது பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|