
![]()
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் திரு. சுவாமிநாதன் அவர்கள் மீள்குடியேற்றப்பட்ட, மற்றும் குடியேற இருக்கும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 19/07/2017 புதன்கிழமை ஆலயத்தில் விசேட பூசையுடன் நடைபெற்றது. மக்களுக்கு மீன்பிடி வலைகளும். மீன்பிடி சங்கத்திற்கு ஐந்து படகுகளும், ஐந்து வெளி இணைப்பு இயந்திரமும் அவற்றில் ஒரு படகும் இயந்திரமும் இன்று கையளிக்கப்பட்டது.
![]()
06.07.2017 அன்று இறைபதம் அடைந்த அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) அவர்களின் பூதவுடல்,
09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக் கிரியைகள் நடைபெற்று 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிக்குள் அமைந்திருக்கும் ”மயிலிட்டித்துறை இந்துமயானத்தில்" தகனம் செய்யப்பட்ட முதலாவது மயிலிட்டி மைந்தன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதேபோல் 10.07.2017 திங்கட்கிழமை அன்னாரின் சாம்பலும் மயிலிட்டிக் கடலில் சங்கமமானது. அவ்வேளையில் மயானத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள். ![]()
மயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள்.
மயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவித்திருக்கின்றார்கள். ![]()
மயிலிட்டி விடுவிக்கப்படும் அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன: சுமந்திரன்.
யாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றமை ஒரு வெற்றியே என்றாலும் மக்களுடைய போராட்டங்கள் மற்றும் ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் போன்றவற்றின் ஒரு முன்னேற்றபடியாகவே பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
ALL
Archives
March 2025
|