
0 Comments
![]()
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பில் 1,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயிலிட்டி-கட்டுவன் வீதிக்கு மேற்குப் புறமாகவுள்ள ஜே-240, ஜே-246 மற்றும் ஜே-247 ஆகிய கிராம சேவைகர் பிரிவுகளுக்குட்பட்ட தென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி வடக்கில் உள்ள இராணுவ இருப்புக்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றது....16/4/2018 ![]()
வலிகாமம் வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுவதுடன், அங்குபொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர். அத்துடன் ஆயுதக் கிடங்கினை சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகின்றது.
![]()
எதிர்வரும் 16ஆம் திகதி வலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணியின் அளவு தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலர், 650 ஏக்கர் விடுவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், மீள்குடியேற்ற அமைச்சர் 500 ஏக்கரே விடுவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
![]()
வலி.வடக்கில் 700 ஏக்கர்கள் விரைவில் விடுவிக்கப்படும்!!
வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மேலும் 700 ஏக்கர் நிலப் பரப்பு விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி, தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|