திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியத்தினால், திருப்பூர் மக்களின் நிதி உதவியுடன் துப்பரவு செய்து அமைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி வைத்தியசாலையின் மேற்குப் பக்கமாகவுள்ள காணியிலேயே தவிசாளர் திரு. சுகிர்தன் அவர்களின் அனுமதியுடன் இந்த நிலம் பாவனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
மயிலிட்டி மண்ணில் மீள்குடியேறிவரும் மக்களால் நமது மயிலிட்டி புதிய வடிவம் பெற்று வருகின்றது. அவற்றுள் ஒரு கட்டமாக விளையாட்டு மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியத்தினால், திருப்பூர் மக்களின் நிதி உதவியுடன் துப்பரவு செய்து அமைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி வைத்தியசாலையின் மேற்குப் பக்கமாகவுள்ள காணியிலேயே தவிசாளர் திரு. சுகிர்தன் அவர்களின் அனுமதியுடன் இந்த நிலம் பாவனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
0 Comments
மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடை14/10/2018
செல்வச் செழிப்புடன் சீரும் சிறப்புமாக வளம் கொழித்து வனப்புடன் திகழ்ந்திருந்த எமது மயிலிட்டி மண் இன்று முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துரிதகதியில் எமது மண்ணை அபிவிருத்தி செய்து எமது மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பாரிய பணி எம்முன் உள்ளது. அதனை செவ்வனே ஆற்றிடும் வகையில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியத்தை கட்டமைக்கும் ஒன்றுகூடல் இன்று நடைபெற்றுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மயிலிட்டி மாணவி அருணகிரிநாதன் தாட்சாயினி.
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் பயிலும் எமது மயிலிட்டி மண்ணின் மகள் அருணகிரிநாதன் தாட்சாயினி 172 மதிப்பெண்ணை பெற்று மாவட்ட ரீதியில் 617 வது இடத்தினையும் தனதாக்கி, பாடசாலைக்கும் எமது மயிலிட்டி மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்த அருணகிரிநாதன் தாட்சாயினி அவர்களின் கல்விப் பயணம் மேலும் மேலும் சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மயிலிட்டி மாணவி வெள்ளிமயில் நிவேதா.
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யா/வடக்கு இந்து ஆரம்ப பாடசாலையில் பயிலும் எமது மயிலிட்டி மண்ணின் மகள் வெள்ளிமயில் நிவேதா 171 மதிப்பெண்ணை பெற்று மாவட்ட ரீதியில் 651வது இடத்தினையும் பாடசாலை ரீதியில் மிகச்சிறந்த பெறுபேற்றினை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் எமது மயிலிட்டி மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்த வெள்ளிமயில் நிவேதா அவர்களின் கல்விப் பயணம் மேலும் மேலும் சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|