நட்டஈடு தருவதான படிவங்களில் எவரும் கையயாப்பமிடவேண்டாம் (பிரதமரிடம் இன்று பேசவுள்ளேன் -மாவை)30/8/2016
0 Comments
எங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம். எங்கள் சொந்த நிலங்கள் மட்டுமே வேண்டும். எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நில மீட்புக்கான அந்தப் போராட்டத்தில் உயிரை விடவும் நாங்கள் தயாராக உள்ளோம் என மல்லாகம்-கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் கூறியுள்ளனர்.
யாழ்.வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து 460 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ள நிலையில் அந்த நிலங்களை உரிமையாளர்கள் நேரில் பார்வையிட்டு அடையாளப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள பகுதி காணி உரிமையாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு குறித்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப்படும்: இரகசியச் சந்திப்பில் பலாலி இராணுவத25/8/2016
மயிலிட்டிப் பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப் பாலாலி இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|