
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.29/12/2018 ![]()
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டம் பிரமந்தனாறு பகுதியில் KN/58 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 539 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நேற்று 27/12/2018 நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் செயலக திறப்பு விழா 20/12/2018 வெள்ளிக்கிழமை அன்று இனிதே நடைபெற்றது.
இந் நிகழ்வில் ம்யிலிட்டியின் அமைப்புக்களும், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச.சிவசிறி, வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு சோ.சுகிர்தன் மற்றும் ஊறணி பங்குத்தந்தை தேவராஜன் பாதர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் திரு த.தனக்குமார், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வெளிக்கள திட்ட நிபுனர் திரு இ.சர்வானந்தா மற்றும் கடற்றொழில் பரிசோதகர் திரு ஜெயசீலன் ஆகியோருடன் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு J/251 கிராம அலுவலர் திரு க.துவாரகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு க.வீரசிவகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.16/12/2018 ![]()
கல்வி செயற்பாட்டை மயிலிட்டி மண்ணில் முன்னெடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 10/12/2018 அன்று நடைபெற்றது.
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் முன்னெடுப்பில் நமது புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் இக்கல்வி நிலைய கட்டுமானப் பணிகள் இனிதே இன்று ஆரம்பிக்கப்பட்டது. ![]()
நமது மயிலிட்டி மண்ணில் பாரம்பரிய கலையும் தற்போது அழிவடைந்து வருகின்ற கலையான சிலம்பாட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. மயிலிட்டி மண் முன்னைய காலங்களில் சிலம்பாட்டத்திற்கு பெயர் போனதாக நமது முன்னோர்களிடமிருந்து அறியக்கூடியதாக காணப்படுகிறது. அதனை மீண்டும் நிலைநாட்டுவதற்காக நமது இளைஞர்கள் நமது மயிலிட்டி மண்ணில் களத்தில் இறங்கியுள்ளார்கள். உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு இதனை தெரியப்படுத்தி நமது இளைஞர்களை இவ் சிலம்பாட்ட பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். நன்றி.
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
ALL
Archives
March 2025
|