கடந்தமாதம் அகில இலங்கை இந்துமாமன்றமும் மனிதநேய அமைப்பும் சேர்ந்து முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா ஊடாக வலி வடக்கு இடம்பெயர்ந்து சபாபதி, கண்ணகி, கோட்ஸ், ஊரனி, நீதவான் ஆகிய 5 முகாம்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் உடுவில் கிளையில் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவண்பவன் ஐயா அவர்கள் மூலம் சுவிற்சர்லாந்த் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரால் வழங்கிய பங்களிப்பின்பேரில் நலன்புரி முகாம்களில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு இரண்டாவது உலர் உணவு நிவாரணம் 26/06/2014 அன்று வழங்கப்பட்டது.
கடந்தமாதம் அகில இலங்கை இந்துமாமன்றமும் மனிதநேய அமைப்பும் சேர்ந்து முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா ஊடாக வலி வடக்கு இடம்பெயர்ந்து சபாபதி, கண்ணகி, கோட்ஸ், ஊரனி, நீதவான் ஆகிய 5 முகாம்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் உடுவில் கிளையில் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
0 Comments
5 வருடங்களாக தன்னைப் பார்க்க யாரும் வரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருந்த கண்ணகியைக் காண்பதற்காக தடைகளைத் தகர்தெறிந்து உயர்பாதுகாப்பு வலயத்தினுள் ஊடுருவி நடாத்தப்பட்ட சிறப்புத் தாக்குதல் சித்திரம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கொடூர யுத்தம் ஏராளமான இழப்புக்களுடன் முடிவடைந்துள்ளது. ஆக்ரோசமான யுத்தத்தால் சாதிக்க முடியாத சில செயற்பாடுகளை அன்பாலும் புரிந்துணர்வினாலும் செயற்படுத்த முடிந்துள்ளது. இலங்கையில் உள்ள குடிமக்கள் அனைவரும் இனங்கள், மதங்கள் அனைத்தையும் ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு அன்பு, புரிந்துணர்வு என்பவற்றைக் கையிலெடுத்தால் எமது நாடு சிறப்பானதாக மாற்றமடைந்துவிடும். யாழ் வலிகாமம் வடக்குப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீரமாணிக்கதேவன்துறையில் உள்ள கண்ணகி , முருகன் ஆகிய கோவில்கள் இவை. மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை அம்மன் ஆலயத்திற்கு வருகின்ற யூலை 11ம் திகதி சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியது பற்றிய செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம், அதற்கமைய திரு.அ.குணபாலசிங்கம் தலைமையிலான குழுவினர் ஆலயத்தின் புனருத்தாரணம் பற்றி ஆய்வு செய்வதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இன்று திங்கள்கிழமை (16/06/2014) மயிலிட்டி சென்று கண்ணகை அம்மன் ஆலயத்தைப் பார்வையிட்டு வந்துள்ளனர். யாழ். குடாநாட்டின் முதலாவது இடப்பெயர்வு நிகழ்ந்து இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன. 24 ஆண்டுகளாக தொடர்ந்து அகதி முகாம்களிலேயே அவல வாழ்வு வாழ்ந்து வரும் வலி.வடக்கு மக்கள் இன்று 25 ஆவது ஆண்டுக்குள் கால் வைக்கின்றனர். அவர்களது வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்தவர்களாக இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களாக பெரும் மனக் கிலேசத்துடன் அவர்கள் இந்தக் கால் நூற்றாண்டுக்குள் பிரவேசிக்கின்றனர். தமது சொந்த நிலத்தை மீட்பதற்காக அவர்கள் நடத்திய போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் என அனைத்துமே ஆயுதமுனையில், ஆட்சியாளர்களால் அடக்கப் பட்ட போதும் தமது மன உறுதியிலிருந்து சிறிதும் தளராதவர்களாக அவர்கள் உள்ளனர். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தைச் சென்று தரிசிக்க இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. மீள்குடியேற்றத் தலைவர் திரு. அ.குணபாலசிங்கம் தலைமையில் கண்ணகை அம்மன் நிர்வாகத்தின் தலைவர் திரு.மு.கருணாகரன், உப செயலாளர் திரு.சி.சிவநேசன், பொருளாளர் திரு.பொ.ரஞ்சன்தேவர் ஆகியோர் கடந்த 05/06/2014 வியாழக்கிழமை அன்று இராணுவத்தின் சிவில் நிர்வாக அலுவலகம் சென்று கேட்டுக்கொண்டனர். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|