
![]()
ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைவாக ஆறு மாதத்திற்குள் வலி.வடக்கு மக்களை பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு சங்கம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கண்டன பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
0 Comments
![]()
இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்களுக்கும், அனைத்து இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் அறவழிப் போராட்டத்திற்கான அழைப்பு! 27.06.2016 திங்கள் காலை 9 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் ஒன்றுகூடி யாழ்ப்பாணம் மனித உரிமை மீற்ல் காரியாலயம் நோக்கிய ஊர்வலம்.
அனைத்து இடம் பெயர்ந்த மக்களையும் தவறாது கலந்து கொள்ளும்படி மயிலிட்டி மீள்குடியேற்றக்குழு, மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் மற்றும் வலிவடக்கு நலன்புரி நிலையங்களின் நிர்வாகம் ஆகிய்வற்றினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ![]()
யாழ்ப்பாணம் மயிலிட்டி - பலாலியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து நாளை புதன்கிழமையுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
இதில் மயிலிட்டி - பலாலி மக்களைக் கலந்து கொள்ளுமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. ![]()
மீள்குடியமர்வுக்கு மயிலிட்டியை விடுவிக்க வேண்டும். இல்லையேல் தொடர் மக்கள் போராட்டம் வெடிக்கும்.
- ஜனாதிபதிக்கு மயிலிட்டி மீள்குடியேற்றக்குழு மகஜர் - யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் மீளக்குடியமர மயிலிட்டியை விடுவிக்க வேண்டும். இம்முறையும் ஏமாற்றினால் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவர் என மயிலிட்டி மீள்குடியேற்றக்குழு தெரிவித்துள்ளது. ![]()
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் 6 மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற படையினர் மிகப்பெரும் தடையாக இருக்கின்றனர் என சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலி வடக்கு மீள்குடியேற்றத்திற்காக ஜனாதிபதி அதிகளவு முயற்சிகளை மேற்கொண்டார் எனவும் கூறியுள்ளார்.
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
January 2025
|