[ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 08:00.48 AM GMT ]
குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றம் முளுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் வலிகாமம் வடக்கில் 23கிராமசேவகர் பிரிவுகளில் இன்னமும் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போதும் 15ற்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முளுமையடைவாதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனினும் வலிகாமம் வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையான அரைநிரந்தர வீடுகள் கூட இல்லாத நிலையில் தற்போதும் 15ற்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது இடம்பெயர்ந்து சென்று அருகிலுள்ள பாடசாலைகள்கோயில்களில் வாழ்வதும் மீண்டும் வருவதுமாக இந்த மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். எனினும் இவர்களுக்கான சொந்த மண்ணும் அவற்றில் பெறுமதியான வீடுகளும் இருந்தும்
இதேவேளை தற்போதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளாக பளைவீமன்காமம் வடக்கு(ஜே237) பளை வீமன்காமம் தெற்கு(ஜே238) கட்டுவன்(ஜே243) கட்டுவன்மேற்கு(ஜே239) தென்மயிலிட்டி(ஜே240) வறுத்தலைவிளான்(ஜே241) குறும்பசிட்டி(ஜே243) வசாவிளான் கிழக்கு(ஜே244) வசாவிளான்மேற்கு(ஜே245) ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள் என அறிவிக்கப்பட்டபோதும் அவற்றில் பாதியிலும் குறைவான பகுதியே விடுவிக்கப்பட்டவை.
இதேபோல் காங்கேசன்துறை மேற்கு(ஜே233) காங்கேசன்துறை மத்தி(ஜே234) காங்கேசன்துறை தெற்கு(ஜே235) மயிலிட்டி வடக்கு(ஜே246) தையிட்டி கிழக்கு(ஜே247) மயிலிட்டித்துறை தெற்கு(ஜே248) தையிட்டி வடக்கு(ஜே249) தையிட்டி தெற்கு(ஜே250) மயிலிட்டித்துறை வடக்கு(ஜே254) பலாலி தெற்கு(ஜே252) பலாலி கிழக்கு(ஜே253) பலாலி வடக்கு(ஜே254) பலாலி வடமேற்கு(ஜே255) பலாலி மேற்கு(ஜே256) ஆகிய பகுதிகளில் இன்னமும் முளுமையாக மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.
இந்தப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 50வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் முகாமகளிலும் ஏனையோர் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர். எனினும் இன்று வரையில் இந்தப்பகுதிகளில் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
இறுதியாக வவாவிளான் மத்தியமகாவித்தியாலயம் விடுவிக்கப்பட்டபோது. அதற்குமேல் எதையும் என்னிடம் கேட்கவேண்டாம் என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்க தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் இந்த பகுதிகளில் மீள்குடியேற்றத்தை செய்யுமாறு வலியுறுத்தி வலிவடக்கு மீள்குடியேற்றக்குழுவின் உபதலைவரும் வலிவடக்கு பிரதேச சபையின் உபதலைவருவமான சட்டத்தரணி சஜீவன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.