[ செவ்வாய்க்கிழமை, 03 ஏப்ரல் 2012, 07:18.36 AM GMT ]
வலிகாமம் வடக்கு, காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு போன்ற பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவினர், யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளனர்.22 வருடங்களுக்கு மேலாக சொந்த ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து, பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தற்போது நாட்டில் போர் முடிந்து மூன்று வருடங்கள் நெருங்கிக் கொண்டிக்கும் அந்த நேரத்தில், எமது பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக, ஜனாதிபதியின் கவனத்திற்கும் பாதுகாப்பு அமைச்சிற்கும் கொண்டு வருவதாகவும், வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரச அதிபர் இமெல்டா குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி தமிழ்வின்.கொம்