
26 வது ஆண்டிலும் தொடருமா இடம்பெயர்ந்த வலி. வடக்கு மக்களின் அவல வாழ்க்கை? 15/06/1990ல் தொடங்கிய இடம்பெயர்வு இன்றுவரை நீடிக்கின்றது. 38 நலன்புரி நிலையங்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் இலங்கையின் பல பாகங்களிலும் வெளிநாடுகளிலும் சொந்தமண்ணுக்குத் திரும்பமுடியாமல் 10,000 (பத்து ஆயிரத்துக்கும்) மேற்பட்ட குடும்பங்கள் தவிக்கின்றன.

இந்த இடம்பெயர்வினால் எமது பண்பாட்டுக் கலாச்சாரங்களையும் விழுமியங்களையும் இழந்து சீரழியும் மக்கள் உழைப்புக்கள் இன்றி வாழமுடியாது தவிக்கின்றார்கள். 20 சதுர அடி முகாம் வீட்டினுள் பல குடும்பங்கள் நிம்மதியின்றி வாழ்கின்றார்கள். இவையெல்லாம் நீங்கவேண்டுமானால் உடனடியாக சகல மக்களையும் சொந்த நிலத்தில் குடியமர்த்தவேண்டும்.
விடிவு கிடைக்கும் என்று புதிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அதுவும் 1100 ஏக்கருடன் கண்மூடிவிட்டது. விடுவிக்கப்பட்ட இடத்தில்கூட 500 ஏக்கர் நிலம் மட்டும்தான் குடியிருக்கக் கூடியவை மிகுதி தரிசு நிலங்களும், குடியிருப்புக்குத் தகுதி இல்லாததும் ஆகும். மிகுதி 5500 ஏக்கர் விரைவாக விடவேண்டும். விடுபட்ட இடங்களில் கூட மக்கள் குடியிருப்பதற்கு ஆகிய வேலைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மக்கள் சலிப்படைகின்றார்கள். தற்போது வாழ்ந்த இடத்தில் தொழில்களை விட்டு சொந்த இடத்தில் வந்து துப்பரவாக்கல், வீடுகட்டும் பணிகளை செய்வதால் உழைப்பு இன்றி வாழ்வாதாரத்துக்கு மிகவிம் கஸ்ரப்படுகின்றார்கள்.
அரசாங்கம் நாலு வருடங்களாக நிறுத்திய உலர் உணவு விநியோகங்களை உடனடியாக இடம்பெயர்ந்த சகல மக்களுக்கும் வழங்கவேண்டும். மீள்குடியேற்றம் தாமதம் ஆவதால் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். உரிய அதிகாரிகள் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஆவன செய்து நல்ல முடிவை வழங்குவீர்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
அ.குணபாலசிங்கம்
தலைவர்
வலி. வடக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வுச் சங்கம்
தலைவர்
வலி. வடக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வுச் சங்கம்
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.