15/06/1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 27ஆண்டுகளின் பின்னர் பலத்த எதிபார்ப்பின் மத்தியில் 03/07/2017ஆம் திகதி காலை 9 மணிக்கு இராணுவத்தினர் எமது மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தையும் அதனைச் சூழவுள்ள 54 ஏக்கர் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் விடுவித்து யாழ் மாவட்ட அரச அதிபர் திரு.வேதநாயகனிடம் ஒப்படைக்க உள்ளனர்.
மேலும் மயிலிட்டி செல்வதற்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலிட்டி கடல் தொழிலாளர் சங்கம், எரிஞ்ச அம்மன் கோவிலடியிலிருந்து 3ம் திகதி காலை 7 மணிக்கு மயிலிட்டியை நோக்கிப் புறப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
அ. குணபாலசிங்கம்
தலைவர்
மயிலிட்டி மீள் குடியேற்றம்
வலி.வடக்கு மீள் குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கம்