அதன்பின்னர் இந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு என 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில்,
குறித்த மக்களுக்கான வீட்டு திட்டம் எவையும் வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் அங்கு உடனடியாக மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் அவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கு படையினராலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்த இக்கட்டான நிலையிலேயே நேற்றைய தினம் மீன்பிடி தொழில் மேற்கொள்வதற்கான அனுமதி படையினரால் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக ஊறணி மீன்பிடி இறங்குதுறையை விடுவிப்பதாகவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. எனினும் இறங்குதுறை விடுவிக்கப்படாமல் வேறு ஒரு இடமே விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இறங்குதுறை தொடர்ந்தும் படையினரின் கட்டுப் பாட்டிலேயே உள்ளது. ஆயினும் தற்போது கடற்பகுதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதை வர வேற்றுள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மீனவர்கள், அருகில் அமைந்துள்ள தமது காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்குவதற்கான ஏற்பாடு கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன என தெல்லிப்பளை பிர தேச செயலர் ஸ்ரீமோகன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடுவிப்பு நிகழ்வானது யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் காலை பத்து மணியள வில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி, வட க்கு மாகாண சபையின் உறுப்பினர் அகிலதாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.