கடந்த தை மாதம் 14ம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமாக 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும் தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களுடைய கோரிக்கைக்கு இணங்க தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது.
மேற்படி ஊறணி பகுதியில் கடந்த வருடம் இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு மேற்படி கரையோரப்பகுதி மக்களிடம் மீள வழங்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் மேலதிக அரசாங்க அதிபர் (கா ணி) எஸ்.முரளிதரன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிறீமோகனன் ஆகியோர் கலந்து கொண்டு ஊறணி பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதியை மக்களிடம் மீள கையளித்துள்ளனர்.